புதுடில்லி, செப்.28– பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரை 25.9.2025 அன்று வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திற்கு அழைத்து டிரம்ப் உபசரித்துள்ளார்.
அப்பொழுது இருநாட்டு உறவுகள், வருங்கால திட்டங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடந்ததாக தெரிகிறது.
2019 க்கு பிறகு பாகிஸ் தான் பிரதமர் ஒருவர் வெள்ளை மாளிகை செல்வது இதுவே முதல் முறை.
50 சதவீத வரி உள்ளிட்ட நடவடிக் கைகளால் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் டிரம்ப் அண்மை காலங்களாக பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வரும் சூழலில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சந்திப்புக்கு பின் அளித்த பேட்டியில் இருவரையும் சிறந்த மனிதர்கள் என டிரம்ப் விவரித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடியை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
காங்கிரசின் அதிகார பூர்வ எக்ஸ் பக்கத்தில் நிழற்படத்துடன் வெளியிடப்பட்ட விமர்சன பதிவில்,
மோடியின் “அன்பான நண்பர்” டிரம்ப், பாகிஸ்தானின் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனிரை ஒரு சிறந்த மனிதர் என்று வர்ணித்துள்ளார்.
இந்திய குடிமக்களின் கொலை களைத் திட்டமிட்டு இந்தியாவுக்கு எதிராக விஷத்தைக் கக்கிய அதே அசிம் முனிர் இவர்தான். நரேந்திர மோடி… தைரியமாக இருங்கள், டிரம்பின் அறிக்கையை எதிர்க்கவும்.
நாடுதான் முதலில் முக்கியம், நட்பு அல்ல.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.