நகரி, செப்.28– பரபரப்பான தற்போ தைய காலகட்டத்தில் வயதான பெற்றோரை பெரும்பாலான பிள்ளைகள் கவனிப்பதில்லை. அவர்களது சொத்துகளை மட்டும் எழுதி வாங்கி விட்டு அவர்களை வீதிக்கு அடித்து விரட்டும் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு நூதன முறையில் தண்டனை வழங்க வந்திருக்கிறது தாத்தாக்கள் சங்கம்.
தாத்தாக்கள் சங்கம்
தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டம் மோதே கிராமத்தில்தான் இந்த தாத்தாக்கள் சங்கம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பிள்ளைகள் யாராவது வயதான பெற்றோரை கவனிக்காமலோ, துன் புறுத்துவதாகவோ தகவல் தெரிந்தால் இவர்கள் தண்டிக்கும் விதம் புதுமையாக இருக்கும்.
கடந்த 15 ஆண்டு களுக்கு முன்பு இந்த கிராமத்தை சேர்ந்த பல பெற்றோரின் சொத்து களை பறித்துச் கொண்டு பல பிள்ளைகள் அவர்களை விரட்டி விட்டனர். இதனை தடுப்பதற்காகவே தாத்தாக்கள் சங்கம் உருவாக்கப்பட்டது.
கடந்த 2010ஆம் அப்போதைய அந்த கிராம பஞ்சாயத்து தலைவர் கட்டம் ராஜி ஊர் பெரியவர்களுடன் சேர்ந்து இந்த சங்கத்தை ஏற்பாடு செய்தார்.
அது மட்டுமின்றி இந்த சங்கத்தை பதிவு செய்தும் வைத்திருக்கிறார்.
இதில் ஊரில் உள்ள 40-க்கும் மேற்பட்ட முதியவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
தண்டனை என்ன?
இந்த ஊரில் பெற்றோரை அவரது மகன் அல்லது மகள் சரியாக கவனித்துக் கொள்ளாவிட்டால் தாத்தாக்கள் சங்கம் வெளியே சென்று புகார் செய்ய வாய்ப்பு அளிக்காது. அதே சமயம் வேடிக்கை பார்த்துக்கொண்டும் இருக்காது. உடனடியாக அந்த மகன் அல்லது மகளை தாத்தாக்கள் சங்க உறுப்பினர்கள் அழைத்து நியாயத்தை எடுத்துச் சொல்கிறார்கள். அப்போதும் கேட்கா விட்டால் கடுமையாக எச்சரிக்கிறார்கள்.
அதற்கு மேலும் முரண்டுபிடித்தால் 40 உறுப்பினர்களும், சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வீட்டின் முன்பு வைத்து சமைத்து, பாதிக்கப்பட்ட வயதான பெற்றோருக்கு சாப்பாடு கொடுக்கிறார்கள்.
பிள்ளைகளின் மனம் மாறும் வரை இந்த நூதன தண்டனை அளிப்பார்கள். வீட்டு முன்னேயே சென்று 40 பேரும் சமைத்து அவர்களும் சாப்பிட்டு பராமரிக்கப்படாத பெற்றோருக்கும் சாப்பாடு வழங்குகிறார்கள். அவர்களின் பிள்ளைகள் மனம் மாறும்வரை அவர்கள் வீட்டின் முன் சமைத்து அந்தப் பெற்றோருக்குக் கொடுத்து தங்கள் எதிர்ப்பை இந்த விதமாக தெரிவிக்கிறார்கள்.
பிள்ளைகள் இத்துடன் தாத்தாக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு இனி தங்கள் பெற்றோரை நல்லபடி
யாக பார்த்துக்கொள் வதாக உறுதி பத்திரம் எழுதித் தருகிறார்கள்.