புதுடில்லி, செப்.28– அஞ்சல் வாக்குகள் எண்ணும் நடைமுறையில் மாற்றத்தை தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது. இது பீகார் சட்ட மன்ற தேர்தலில் இருந்தே நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல்காந்தி குற்றச்சாட்டு
பீகார் மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அந்த மாநிலத்தில் எஸ்.அய்.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி முடித்துள்ளது. இதன் மூலம் சுமார் 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்தார். மேலும் வாக் காளர் பட்டியலில் இருந்து முறை கேடாக நீக்கப்படுவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்து இருந்தார்.
இந்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. அதே நேரம் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க மோசடியை தடுக்க புதிய நடைமுறை கொண்டு வரப்படும் என்று அறிவித் துள்ளது.
அஞ்சல் வாக்குகள்
இந்தநிலையில் அஞ்சல் வாக்குகள் எண்ணும் நடை முறையில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் நேற்று (25.9.2025) அறிவித்துள்ளது. அதாவதுவாக்கு எண்ணிக்கையின் போது முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்படும். ஆனால் அதன் முடிவுகள், மின்னணு வாக்கு எந்திரத்தில் பதிவான வாக் குகள் அனைத்தும் எண்ணப்பட்டு, அனைத் துச் சுற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்ட பின்னர் தான் அஞ்சல் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்படும்.
அதிரடி மாற்றம்
தற்போதைய மாற்றத்தின்படி, வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளின் கடைசி இரண்டுச் சுற்றுக்கு முன்பாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் பட வேண்டும். அதாவது 20 சுற்று எண்ணிக்கை என்றால், 18-ஆவது சுற்று எண்ணிக்கை முடிந்த பின்னர் அஞ்சல் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதன் பிறகு கடைசி 2 சுற்று வாக்குகள் எண்ணப்படும். அதே நேரம் நிராகரிக்கப்பட்ட அஞ்சல் வாக்குகள், கட் டாயம் மறு சரிபார்ப்புக்கு அனுப்ப வேண்டும். இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர்களுக்கு, தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி யுள்ளது.
பீகார் தேர்தலில்
நடைமுறைக்கு வரும்
நடைமுறைக்கு வரும்
முன்பு தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே அஞ்சல் வாக்குகள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், வீட்டில் இருந்தே வாக்களிக்க வசதி யாக அவர்களுக்கும் அஞ்சல் வாக்குகள் கொடுக்கப்பட்டுள்ள தால், அஞ்சல் வாக்குகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் கணிசமான எண்ணிக் கையில் உயர்ந்துள்ளது.
அதன் காரணமாகவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரி வித்துள்ளது. இந்த புதிய முறை வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
29 முக்கிய நடவடிக்கைகள்
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அதி காரிகள் கூறுகையில், தேர்தல் செயல் முறையை நெறிப் படுத்தவும், மேம்படுத்தவும் கடந்த 6 மாதங்களில் 29 முக்கியமான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது என்றனர்.