ஜெருசலேம், செப். 27- காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் போர் அறிவித்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
கிட்டத்தட்ட 2 ஆண்டு களுக்கு மேலாக நடந்து வரும் இந்த தாக்குதலில் அப்பாவி குழந்தைகள், பெண்கள் உள்பட்ட இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் செத்தனர். போர் தாக்குதலை நிறுத்த உலக நாட்டு தலை வர்களால் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இருப்பினும் போர் தாக்குதல் தொடர்ந்து நீடிக்கிறது.
இந்தநிலையில் காசா வில் 25.9.2025 அன்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்குள்ள டெயிர் அல் -பலா நகரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் குண்டுமழை பொழிந்தது. இதில் 8 குழந்தைகள் உள்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே செத்தனர்.