வலங்கைமான் ஒன்றியத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

3 Min Read

வலங்கைமான், செப். 26- கும்பகோணம் கழக மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா 17.09.2025 அன்று காலை வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் படத்திற்கும், அண்ணாசிலைக்கும் குடந்தை மாவட்ட செயலாளர் சு.துரைராஜ், மாவட்ட துணைச் செயலாளர் து.சரவணன் மாலை அணிவித்தனர்.

ஒன்றிய தலைவர் க.பவானி சங்கர், ஒன்றிய செயலாளர் சி. ராமச்சந்திரன் தலை மையில் பெரியார் பிறந்த நாள் விழாவினை துவக்கி வைத்தார் மாவட்ட செயலாளர் சு.துரைராசு.

வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், காவல் நிலையம், நீதிமன்ற வளாகம் ஆகிய இடங்களில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது ,

அரசு மருத்துவமனை “மருத்துவப் பயனாளிக ளுக்கு” பழங்களும் பிஸ்கட் மற்றும் இனிப்பு வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.

தில்லையம்பூர்: மு. நடராஜன் நடத்திவரும் “தில்லையம்பூர் முதி யோர் காப்பதத்தில்” உள்ள அனைத்து முதியோர் களுக்கும் இனிப்பு, பிஸ்கட், வழங்கி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. சந்திரசேகரபுரம்: அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் முன்னிலையில் ஆசிரியர் விஜய பூபாலன் தலைமையில் குழந்தைகளுக்கு லட்டு இனிப்பு வழங்கி அனை வருக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.  ஆண்டாங்கோயில் கடை வீதியில் சா. சித்திரசேனன் கழக கொடியை ஏற்றி வைத்தார். ஆண்டா கோயில் தலையாரி தெருவில் கழக ஒன்றிய துணைத் தலைவர் மா இனமான கொடியினை ஏற்றி வைத்தார். பெரியார் நகரில் அ. ஜீவராணி மகளிர் அணி தலைவர் திராவிடர் கழக கொடியினை ஏற்றி வைத்தார். பத்மநாபன் இல்லத்தில் கழகக் கொடி யினை ப.பரிமளம் மகளிர் அணி ஏற்றி வைத்தார். வலங்கைமான் கிழக்கு: ஏ எஸ் கணபதி இல்லத்தில் கா. சரஸ்வதி அம்மாள் கொடியேற்றி வைத்தார்.,

விருப்பாச்சிபுரம்: சுயமரியாதை சுடரொளி வே. கோவிந்தன் (குடந்தை மாவட்டகழக காப்பாளர்) இல்லத்தில் கோ. சமதர்மம் கழக கொடியை ஏற்றி வைத்தார். நார்த்தங்குடி சுயமரியாதை சுடரொளி ரங்கசாமி இல்லத்தில் சூசையம்மாள் கொடியினை ஏற்றி வைத்தார். கோவிந்தகுடி கீழத்தெருவில் கோவி.ரமேசு இல்லத்தில் கோ. ஜெயலட்சுமி கழக கொடியினை ஏற்றி வைத்தார், மேனாள் ஒன்றிய தலைவர் நா. சந்திரசேகரன் இல்லத்தில் கோவி. சாந்தி மகளிர் அணி  கொடியினை ஏற்றி வைத்தார்.

கோவிந்தகுடி மெயின் ரோட்டில் சி. புதியவன் இல்லத்தில் ஆர்.ஜெயபால் கோவிந்தகுடி தலைவர் கொடியை ஏற்றி வைத்தார். கோவிந்தகுடியில் திராவிட கழக கொடியினை க. பவானி சங்கர் (ஒன்றிய கழக தலைவர்) ஏற்றி வைத்தார்.  கோவிந்தகுடி “தெட்சிணாமூர்த்தி- தனபாக்கியம்” இல்லத்தில் தெ. உத்தமன் காமராஜ் கழக கொடி ஏற்றி வைத்தார். நெடுவாசல் கிராமத்தில் பெரியார் பெருந்தொண்டர் வரத ராஜன் கழக கொடியை ஏற்றி வைத்தார். ஆவூர் மெயின் ரோடு “அய்யா நர்சரி”யில் தெ. அசோக்ராஜ் கழக கொடி ஏற்றி வைத்தார்

ஒன்றியம் முழுதும் பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவிந்தகுடி தட்சிணா மூர்த்தி தனபாக்கியம் இல்லத்தில் மதியம் புலால் உணவு வழங்கப்பட்டது. மங்கலம் கிராமத்தில் க. சீனிவாசன் இல்லத்தில் கழக கொடியினை (ஒன்றிய தலைவர்) க. பவானி சங்கர் ஏற்றி வைத்தார்.  மதகரம் கிராமத்தில் மா. கல்யாணசுந்தரம் இல்லத்தில் கழக கொடி யினை க.கரிகாலன் ஏற்றி வைத்தார்.  கோட்டச்சேரி கிராமத்தில் கிளை தலைவர் கஜேந்திரன் இயக்க கொடியினை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந் தார். மனக்குண்டு நடு நிலைப் பள்ளிக்கு கோ. பாண்டியன் அனைத்து குழந்தைகளுக்கும் இனிப்பு வழங்கினார்.  மணலூர் நடுநிலைப் பள்ளியில் அனைத்து குழந் தைகளுக்கும் க.பவானி சங்கர் மிட்டாய்கள் பிஸ்கட் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.  ஏரி வேலூர் கிராமத்தில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளியில் வேலூர் பிரபாகரன் அனைத்து குழந்தைகளுக் கும் இனிப்பு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.  வெள்ளைக்குடி கிராமத் தில் உள்ள தொடக்கப் பள்ளியில் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இனிப்புகள் வழங்கினார் க. லோகநாதன், ஊத்துக்காடு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் பழனி  அனைத்து குழந்தை களுக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தார்.  ஆவூர், கோவிந்தகுடி துவக் கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி குழந்தைகளுக்கு தெ.அசோக் ராஜ் இனிப்பு வழங்கினார்.

ஒன்றியம் முழுவதும் “இல்லந்தோறும் இயக்கக் கொடி” ஏற்று விழா பேரணிக்கு வருகை தந்த வரதராஜன், இரா. ஜெயபால், சி. ராமச்சந்திரன், பரிமளம்- பத்மநாபன், ஜீவராணி- ஐயா பிள்ளை, பவானிசங்கர், மா.வீரமணி ஒன்றிய துணைத் தலைவர் மற்றும் அனைவருக்கும் ஆண்டாள் கோவில் மா. வீரமணி. நன்றி தெரிவித்துக் நிகழ்வை முடித்துவைத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *