பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க போர்ச்சுகல் அரசும் முடிவு

2 Min Read

லிஸ்பன், செப்.25- பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ளதாக போர்ச்சுகல் அரசு தெரிவித்து உள்ளது.

மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே நீண்ட காலமாக மோதல் உள்ளது. பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட கால கோரிக்கை உள்ளது.

இதை அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்டவை ஏற்கவில்லை.

இந்நிலையில், மேற்கு அய்ரோப்பிய நாடான போர்ச்சுகல், பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் நாடுகளுக்கான பட்டியலில் போர்ச்சுகலும் தற்போது இணைந்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புடன், இஸ்ரேல் போரில் ஈடுபட்டுள்ளது.

இந்தப் போரில், மனிதாபிமான நெருக்கடி மற்றும் பாலஸ்தீன நிலங்களை இஸ்ரேல் இணைக்க முயல்வதாக பல நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இதையடுத்து, பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிப்பதாக பல நாடுகள் கூறி வருகின்றன.

கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி, அய்.நா., உறுப்பு நாடுகளில் 147 நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.

தற்போதைய புதிய அறிவிப்புகள் இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும்.

அனுமன் பொய்யான கடவுள்:

டிரம்ப் கட்சி பிரமுகரின் சர்ச்சை பேச்சு

நியூயார்க், செப்.25- அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், சுகர்லேண்ட் நகரில் அமைந்துள்ள அஷ்டலட்சுமி கோவிலில் 90 அடி உயர அனுமன் சிலை அமைந்துள்ளது. கடந்தாண்டு திறக்கப்பட்ட இந்தச் சிலை வட அமெரிக்காவின் மிக உயரமான கடவுள் சிலைகளில் ஒன்று என்றும், அமெரிக்காவின் ஒற்றுமை சிலை என்றும், நாட்டின் 3ஆவது உயரமான சிலை என்றும் போற்றப்படுகிறது.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் டங்கன். இவர் டெக்சாஸ் மாகாண குடியரசு கட்சி தலைவராக இருந்து வருகிறார்.

அலெக்சாண்டர் டங்கன் எக்ஸ் வலைதளத்தில் கடவுள் அனுமன் பற்றி ஒரு  பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,

டெக்சாஸில் ஒரு பொய்யான இந்து கடவுள் சிலையை ஏன் அனுமதிக்கிறோம். இது ஒரு கிறிஸ்தவ நாடு என பதிவிட்ட அவர், பைபிளில் இடம்பெற்றுள்ள சில வாசகங்களையும் அதில் சுட்டிக்காட்டி இருக்கிறார். மேலும் அவர், அஷ்டலட்சுமி கோவிலில் உள்ள அனுமன் சிலை காட்சிப்பதிவையும் அந்தப் பதிவில் இணைத்துள்ளார்.

இந்நிலையில், அலெக்சாண்டர் டங்கனின் கருத்துக்கு அமெரிக்க இந்து பவுண்டேஷன் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளதாம். இது தொடர்பாக புகார் ஒன்றை டெக்சாஸில் உள்ள குடியரசு கட்சி அலுவல
கத்துக்கு எக்ஸ் வலைதள பதிவு மூலம் அனுப்பியுள்
ளதாம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *