புதுடில்லி, செப்.24- 265 பேரை பலிகொண்ட அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து சுதந்திரமான விசாரணை கோரிய வழக்கில் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியது.
கடந்த ஜூன் 12-ஆம் தேதி, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு ஒரு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. சற்று நேரத்தில் அந்த விமானம் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில், விமான ஊழியர்கள், மருத்துவ மாணவர்கள் உள்பட 265 பேர் பலியானார்கள். விபத்து குறித்து விமான விபத்து விசாரணை கடந்த ஜூலை
12-ஆம் தேதி பூர்வாங்க விசாரணை அறிக்கையை வெளியிட்டது.
தகவல்கள் மறைப்பு
இதற்கிடையே, கேப்டன் அமித்சிங் என்பவர் தலைமையி லான ‘சேப்டி மேட்டர்ஸ் பவுண் டேசன் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப் பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பூர்வாங்க விசாரணை அறிக்கை யில், எரிபொருள் விடுவிக்கும் பொத்தானை திறப் பதற்கு பதிலாக, மூடிவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் விமானி தவறு செய்தது சுட்டிக்காட்டப்பட் டுள்ளது. இந்த விசாரணை, குடிமக்களின் வாழும் உரிமை, உண்மை தகவல்களை பெறுவதற்கான அடிப்படை உரிமைகளை மீறுகிறது.டிஜிட்டல் விமான தரவு பதிவு கருவி, விமானி அறை குரல் பதிவு உள்ளிட்ட முக்கியமான தகவல்கள், பூர்வாங்க அறிக்கையில் மறைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற விபத்துகளில் சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான விசாரணை அவசியம். அத்தகைய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விசாரணை
இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த், கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், “விசாரணை குழுவில், 3 பேர் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தை சேர்ந்தவர்கள். எனவே, சொந்த நலன்கள் குறுக்கிடும் பிரச்சினை எழலாம். விபத்துக்கான காரணத்தை அறிய விமான தரவு பதிவுக் கருவியில் பதிவான தகவல்களை வெளியிட வேண்டும்” என்று கூறி னார்.
போட்டி நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தும்
அதற்கு நீதிபதிகள் கூறிய தாவது:-
விமான விபத்து பிரச்சினையில் ரகசியத்தை காக்க வேண்டிய பிரச்சினை உள்ளன.
ஆனால், விமானிகளின் செயல் பாட்டில் தவறு இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டு இருப்பது பொறுப்பற்றது.
சில குறிப்பிட்ட வகையான தகவல்களை போட்டி விமான நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தக்கூடும். எனவே, சுதந்திரமான, நியாயமான விசாரணை தொடர்பான கோரிக்கைக்கு மட்டும் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பு கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
ஒன்றிய அரசு, சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.