செந்துறை, செப். 22- திராவிட கழக மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையில் 15.9.2025 காலை 10 மணியளவில் செந்துறையில் பெரியார் கணினி மய்யத்தில் ஒன்றிய திராவிடர் கழக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கழக மாவட்ட தலை வர் விடுதலை நீலமேகன் தலைமையில் கழகப் பொதுக்குழு உறுப்பினர் ரத்தின ராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் பொன் செந்தில்குமார், மாவட்ட விவசாய அணி தலைவர் மா.சங்கர் ஆகியோர் முன்னிலையிலும் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள். நிகழ்வில் மாவட்ட தொழிலா ளர் அணி தலைவர் வெ.இளவரசன், மாவட்ட இளைஞரணி தலைவர் லெ.தமிழரசன், மாவட்ட விவசாய அணி தலைவர் மா.சங்கர், அமைப்பாளர் இளவழகன், ஒன் றிய தலைவர் மு.முத்தமிழ்ச் செல்வன், ஒன்றிய செய லாளர் ராசா.செல்வகுமார், நகர கழக தலைவர் பழ.இளங்கோவன் ஆகிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விடுதலை நாளேட் டிற்கு சந்தா சேர்த்து கொடுப்பது எனவும், சுயமரியாதை பிரச்சார இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கழகத் தோழர்கள் அதிக அளவில் கலந்து கொள்வது என வும், பெரியார் உலகம் அமைவதற்கு கழகத் தோழர்களுடன் வசூல் செய்து கொடுப்பது எனவும் மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.