புதுடில்லி, செப்.13- இத்தாலியை சேர்ந்தவரான காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, கடந்த 1983-ம் ஆண்டுதான் இந்திய குடியுரிமை பெற்றார். ஆனால் 1980ஆம் ஆண்டிலேயே டெல்லி தொகுதியில் அவர் வாக்காளராக பதிவு செய்யப்பட்டு உள்ளார். இதற்கு எதிராக டில்லி நீதிமன்றத்தில் விகாஸ் திரிபாதி வழக்கு தொடர்ந்தார். இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்னரே வாக்காளராக பதிவு செய்தது சட்ட விரோதம் என தனது மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு 11.9.2025 அன்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பவன் நரங், ஒருவர் முதலில் குடியுரிமைக்கான வரம்பை பூர்த்தி செய்த பின்னர்தான் வாக்காளராக பதிவு செய்ய முடியும் என வாதிட்டார்.
வழக்கின் விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில், சோனியா காந்திக்கு எதிரான இந்த வழக்கை கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு வைபவ் சவுராசியா தள்ளுபடி செய்தார்.