இமாச்சலம் இந்தியாவின் நான்காவது முழு எழுத்தறிவு பெற்ற மாநிலம் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு அறிவிப்

2 Min Read

சிம்லா, செப்.11  முழுமையான எழுத்தறிவு கொண்ட மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்குக் கல்வி அளிக்கும் ‘உல்லாஸ்’ (ULLAS) திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பன்னாட்டு எழுத்தறிவு நாளை முன்னிட்டு இமாச்சலில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, தங்கள் மாநிலம் இந்தியாவின் நான்காவது முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாறியுள்ளது என்று அறிவித்தார்.

ஏற்ெகனவே, மிசோரம், கோவா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலங்களாக மாறியுள்ளன. இந்த வரிசையில், இமாச்சலம் இப்போது இணைந்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் இந்த சாதனைக்கு, அரசின் பல்வேறு கல்வித் திட்டங்களும், குறிப்பாக வயது வந்தோருக்கான கல்வித் திட்டங்களும் முக்கியக் காரணமாகக் கருதப்படுகின்றன.

முன் ஜாமீன் பெற எந்த நீதிமன்றத்தை அணுக வேண்டும்

 உச்சநீதிமன்றம் விசாரணை

புதுடில்லி, செப்.11  கேரளாவில் 2 பேர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுக்களை மாநில உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்கள் 2 பேரும் முதலில் செசன்ஸ் நீதிமன்றத்தில்முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்யாமல் நேரடியாக  உயர் நீதிமன்றத்தை நாடியதும், இவ்வாறு நேரடியாக தாக்கல் செய்யப்படும் முன் ஜாமீன் மனுக்களை விசாரிப்பதை கேரள உயர் நீதிமன்றம்வழக்கமான நடைமுறையாக கொண்டிருப்பதும் தெரியவந்தது.

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கேரள உயர் நீதிமன்றம் நேரடி முன் ஜாமீன் மனுக்களை அதிகம் விசாரிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு தெரிவித்து உள்ளது. எனவே முன் ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பது மனுதாரரின் முடிவா? அல்லது முதலில் செசன்ஸ் நீதிமன்றத்தை  நாட வேண்டியது கட்டாயமா? என்பதை விசாரிப்போம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்கு மூத்த வழக்குரைஞர்கள் சித்தார்த் லுத்ராவை நியமித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *