டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*’பள்ளிகளில் ஜாதிப் பாகுபாட்டை ஊக்குவிக்கும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மாநில கல்வி அதிகாரிகளுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்த முடியாது, உச்ச நீதிமன்றத்தில் தெலங்கானா அரசு சார்பில் வாதம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது சொந்த நாடாளுமன்ற தொகுதியான ரேபரேலிக்கு செல்லும் வழியில் பாஜக அமைச்சர் மற்றும் தொண்டர்கள் மறியல். ‘வாக்கு திருட்டால்” பாஜக விரக்தி அடைந்துள்ளது’ என ராகுல் விமர்சனம்.
*குடியரசுத் தலைவர் குறிப்பு விசாரணை: சில மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க நான்கு ஆண்டுகள் வரை தாமதம் செய்தது ஏன்?. அதற்கான காரணம் என்ன, அதனை ஏன் மசோதாவை நிறைவேற்றிய மாநில அரசுக்கு தெரிவிக்கவில்லை என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒன்றிய அரசுக்கு அடுக்கடுக்கான கேள்வி.
தி டெலிகிராப்:
* குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ‘வாக்குகளை வாங்க’ பாஜக ரூ.15-20 கோடி செலவழித்ததாக அபிஷேக் பானர்ஜி குற்றச்சாட்டு.
தி இந்து:
*குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக ‘வாக்குத்திருட்டு’ என மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றச்சாட்டு.
* “சில எண்களை நான் உங்களுக்குக் கூறுகிறேன், மக்களவையில் துணைத் தலைவர் இல்லாமல் 2,277 நாட்கள் ஆகின்றன, மணிப்பூரில் வன்முறை தொடங்கி 861 நாட்கள் ஆகின்றன, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா அதிகரித்த வரியை விதித்து 14 நாட்கள் ஆகின்றன, ஒன்றிய அமைச்சர் ஜே.பி. நட்டா பாஜக தலைவராக 966 நாட்கள் ஆகின்றன, மேற்கு வங்கத்தில் MGNREGA நிறுத்தப்பட்டு 1,281 நாட்கள் ஆகின்றன, இறுதியாக, பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்து 4,116 நாட்கள் ஆகின்றன,” என்று ‘ஓ’ பிரையன் கூறினார், துணை குடியரசுத்தலைவர் தேர்தல் எண் கணிதத்தை விட அரசாங்கத்தை பொறுப்பேற்க வைக்க இந்த எண்கள் மிக முக்கியமானவை என திரிணாமுல் காங்கிரஸின் மாநிலங்களவை நாடாளுமன்ற கட்சித் தலைவர் டெரிக் ஓ’ பிரையன் பேச்சு.
– குடந்தை கருணா