‘வாக்குத் திருடர்கள் பதவி விலக வேண்டும்’ முழக்கம் நாடு முழுவதும் ஒலிக்கிறது: மக்கள் மத்தியில் மேலும் கொண்டு செல்வோம்!

1 Min Read

லக்னோ, செப்.11 பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்தப்பணி 65 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் வாக்கா ளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரி வித்துள்ளன. மேலும், தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வருகிறார்.

உச்சநீதிமன்றம் உத்தரவு

அதேவேளை, வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் ஆதார் உள்ளிட்ட 12 அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை காட்டி தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக பாஜகவை குற்றஞ்சாட்டி ‘வாக்குத் திருடர்கள் பதவி விலக வேண்டும்’ என்ற முழக்கத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னெடுத்துள்ளார்.

மக்களிடம் மீண்டும், மீண்டும்
கொண்டு செல்வோம்

உத்தரப்பிரதேசத்தில் தனது தொகுதியான ரேபரேலிக்கு ராகுல் காந்தி நேற்று (10.9.2025) பயணம் மேற்கொண்டார். லக்னோ விமான நிலையத்திற்கு வந்த ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ‘வாக்குத் திருடர்கள் பதவி விலக வேண்டும்’ என்ற எங்களின் முழக்கம் நாடு முழுவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த முழக்கத்தை தெளிவான முறையில் மக்களிடம் மீண்டும், மீண்டும் கொண்டு செல்வோம்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *