‘புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவில் ‘சோழர்களின் செங்கோல்’ என்ற பொருத்தமில்லாப் புளுகைப் பரப்பி – ‘ஆஹா நம் தமிழ் ஒலித்தது; கோளறு பதிகம் பாடப்பட்டது – தமிழுக்குக் கிடைத்த பெருமை – மோடி அரசின் தமிழ்க் காதல் எப்படியெல்லாம் மணம் வீசுகிறது’ என்று சில துதிபாடிகளும், அளப்பர்களும் அள்ளி விடுகின்றனர்!
இதன் ரகசியம் என்ன தெரியுமா? சைவத்தின் ஆதினங்களுக்கு இப்படி திடீர் லாட்டரி அடித்து டில்லித் தலைநகருக்குப் படையெடுப்பு! பழைய செங்கோல் அளித்த நிகழ்ச்சியின் போதுகூட இத்தனை பண்டார சந்நதிகளின் படை அழைத்துச் செல்லப்படவில்லை. இப்போது என்ன தனி “சார்ட்டட்பிளைட்” என்ற ஸ்பெஷல் விமானப் பயணம்!
(அது சனாதனமா? சாஸ்திர நோக்கமா என்ற கேள்வி ஒருபுறமிருந்தாலும்கூட) வருகிற 2024 பொதுத் தேர்தலில் சைவ வேளாளர் என்ற வெள்ளாளர் ஜாதியினரை வலை வீசிப் பிடிக்கத்தான் என்று இன்றுகூட ஒரு நாளேட்டில் ஒரு செய்தியாளர் எழுதி ரகசியத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.
தி.மு.க. கூட்டணியை எதிர்க்க இதுவும் ஒருவகை (Social Engineering) யுக்தியா? புது வித்தையா? – வியூகமா?
பலன் பெரிய பூஜ்ஜியமே – ராஜ்ஜியமல்ல!