மதவிழா என்றால் இப்படித்தானோ! டில்லி செங்கோட்டையில் நடைபெற்ற ஜைனர்களின் மத விழாவில் தங்கக் கலசங்கள் திருட்டு!

1 Min Read

புதுடில்லி, செப். 9- ஜைனர்களின் மத நிகழ்ச்சியில் துறவி போல் வந்த ஒரு நபர், 2 தங்க கலசங்களை திருடி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டில்லி செங்கோட்டை வளாகத்தில் ஜைன மதத்தினரின் 10 நாள் மத நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஜைனர்களின் 10 தர்மங்கள் (தஸ்லக் ஷன் பர்வா) தொடர்பான 10 நாள் விழா கொண் டாடப்பட்டு வருகிறது. மதச் சடங்குகள், பூஜைகள் செய்வதற்காக தொழிலதிபர் சுதிர் ஜெயின் என்பவர் அன்றாடம் 2 தங்க கலசங்களை கொண்டு வருவார். அந்த கலசங்களில் விலை உயர்ந்த கற்கள் பதிக்கப் பட்டிருக்கும்.

கடந்த 3.9.2025 அன்று நடைபெற்ற மத கொண்டாட்டத்தின்போது மேடையில் வைத்திருந்த 2 தங்க கலசங்கள் திருடு போயின. அதன் மதிப்பு ரூ.1.5 கோடி நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் முக்கியமான வர்களை வரவேற்பதில் நிர்வாகிகள் கவனமாக இருந்தபோது, இந்த திருட்டு நடந்துள்ளது.

இதுகுறித்து உடனடியாக “காவல் துறையில் புகார் அளிக்கப்பட்ட உடன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, ஜைன துறவி போல் வந்த ஒருவர், மிகப் பெரிய பையை எடுத்துச் செல்வது தெரிய வந்தது. அவரை அடையாளம் கண்டுள்ளதாகவும், விரைவில் கைது செய்வோம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து சுதிர் கூறும்போது, “மத நிகழ்வுக்காக செய்வதற்காக தங்க கலசங்களை அன்றாடம் கொண்டு வருவேன். அதில் அழகுக்காக விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டிருக்கும். அது பற்றியோ, அல்லது விலை பற்றியோ கவலை யில்லை. ஆனால், அந்த தங்கக் கலசங்கள் எங்களுக்கு முக்கியமானவை” என்றார்.

ஜைனர்களின் மதக் கொண்டாட்டம் வரும் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அன்றைய நாள் சிறப்பு விருந்தினராக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *