சிம்லா, செப்.9- இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பெய்த கனமழை, வெள்ளம், மற்றும் நிலச்சரிவுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 6 வரையிலான காலகட்டத்தில், மாநிலம் முழுவதும் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களால் 366 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 203 பேர் மழை தொடர்பான நிகழ்வுகளிலும், 163 பேர் சாலை விபத்துக்களிலும் உயிரிழந்துள்
ளனர்.
நிலச்சரிவில் 42 பேரும், நீரில் மூழ்கி 34 பேரும், மேகவெடிப்பில் 17 பேரும், மரம் மற்றும் பாறைகள் விழுந்து 40 பேரும் உயிரிழந்துள்ளனர்.
அரசு சொத்துக்கள் ரூ.4,006 கோடியும், தனியார் சொத்துக்கள் ரூ.67 கோடியும் என மொத்தம் ரூ.4,073 கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
3,390 வீடுகள் மற்றும் 40 குடிசைகள் சேதமடைந்துள்ளன. 1,464 கால்நடைகளும், 26,955 பண்ணை பறவைகளும் உயிரிழந்துள்ளன.
சாலைகள், மின்சாரத் திட்டங்கள், நீர் விநியோக அமைப்புகள், பள்ளிகள், சுகாதார நிலையங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளிட்ட பல அத்தியாவசிய உட்கட்டமைப்புகள் இந்த மழையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.