லக்னோ, செப்.8 அமெரிக்கா வுடனான இந்தியாவின் உறவு எந்தச் சூழ்நிலையிலும் பாதிக்கப்படக் கூடாது என சமாஜ்வாதி கட்சித் தலை வரும், உத்தரப் பிரதேச மேனாள் முதலமைச்சருமான அகிலேஷ் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பொருள்கள் மீது 50% கூடுதல் வரி விதித்த சூழலில், அகிலேஷ் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
டிரம்ப், இந்தியப் பொருள்கள் மீது கூடுதல் வரி விதித்தது, இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் வர்த்தக ரீதியாக சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், “பிரதமர் நரேந்திர மோடியும் நானும் நண்பர்களாக இருப்போம்” என டிரம்ப் கூறிய தோடு, மோடியும் இதே கருத்தைப் பிரதிபலித்தார்.
அமெரிக்காவுடனான உறவின் முக்கியத்துவம்
செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் “அமெரிக்கா ஒரு முதலீட்டாளர்களின் தலைவன். அங்கே சொத்துக்களும் பணமும் உருவாக்கப்படுகின்றன. அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம், சுகாதாரம் போன்ற பல துறைகளில் அமெரிக்கா உலகின் சிறந்த நாடாகத் திகழ்கிறது. அப்படிப்பட்ட ஒரு நாட்டுடனான உறவு ஒருபோதும் பாதிக்கப்படக் கூடாது” என்று கூறினார்.
மேலும், “நாம் நமது பொரு ளாதாரத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். அதே சமயம், பெரிய அளவில் வர்த்தகம் செய்யும் அமெரிக்கா போன்ற ஒரு நாட்டைப் புறக்கணிக்க முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில், இந்தியாவின் எல்லை மற்றும் சந்தைகளில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் சில நாடுகளிடம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அகிலேஷ் வலி யுறுத்தியுள்ளார்.