திருவள்ளூர், செப்.8- காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடுநகர திமுக செயலாளரும், மாங்காடு நகராட்சி துணைத் தலைவருமான ஜபருல்லா மகள் சனோபர்பசீலா-அப்துல் மாலிக் சல்மான் திருமணம் நேற்று (7-9-2025) நடைபெற்றது.
இதில், திமுக இளைஞரணி செயலாள ரும் துணை முதலமைச் சருமான உதயநிதி ஸ்டாலின்பங்கேற்று, திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப் போது அவர் பேசியதாவது: 75 ஆண்டுகளுக்கு முன் பெல்லாம் திருமண அழைப் பிதழில் பெயர்களுக்கு பின்னால் ஜாதி பெயர்தான் இருக்கும். ஜபருல்லாவின் மகளின் திருமண அழைப்பிதழில் மணமக்கள் இருவரும் படித்த படிப்பு விவர ங்கள் உள்ளன. இந்த மாற்றம்தான் திராவிட இயக்கத்தின் சாதனை திராவிட இயக்கத்தின் லட்சிய ங்களை நனவாக் கும் வகையில் முதலமைச்சர் இன்றைக்கு திராவிட மாடல் அரசை வழிநடத்திக் கொண் டிருக் கின்றார். பெண்கள்முன் னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். முதலமைச்சரின் ஏராளமான திட்டங் களின் காரணமாக 11.19 சதவீத வளர்ச்சியோடு நாட்டிலேயே முதல் மாநில மாக தமிழ்நாடு வளர்ந்து கொண்டிருக்கிறது. திமுக என்றைக்கும் சிறு பான்மை மக்களின் பாதுகா வலனாக தொடந்து இருந்து கொண்டு வருகின்றது. திமுக சாதனைகளை மக்களிடம் கொண்டு சென்றால் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறம். திமுக அரசு, 7ஆவது முறையாகவும், ஸ்டாலின் 2ஆவது முறை யாகவும் ஆட்சி யில் அமர வேண்டுமென் றால், அடுத்த 6 மாதங் கள் திமுகவினர் தீவிர பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றார்.
