சென்னை, செப். 8- தொடக் கக் கல்வி இயக்குநரகம், கிராமப்பு றங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்காக, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
3 முதல் 6-ஆம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவிகளின் கல்வி இடைநிற்ற லைத் தடுப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
இந்தத் திட்டப் பணிகளை ஒருங்கிணைக்க, மாவட்டக் கல்வி அலுவலர்கள் தொடர்பு அலு வலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
விவரப் பதிவேற்றம்: எமிஸ் (EMIS) தளத்தில் விடுபட்ட மாணவிகளின் விவரங்களை வரும் 10-ஆம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
13,304 மாணவிகளுக்கு ஆதார் விவரம்.60,349 மாணவிகளுக்கு வங்கிக் கணக்கு எண்.45,498 மாணவிகளுக்கு ஆண்டு வருமானம் தொடர்பான விவரங்கள். இந்த விவரங்களைப் பதிவு செய்வதன் மூலம் மாணவி களுக்கு ஊக்கத்தொகை விரைவாகக் கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.