அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைப்பது முடியாத காரியம் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க. ஓர் உடைந்த கண்ணாடி என்றும், அதை ஒட்ட வைப்பது மிகக் கடினம் எனவும் கூறினார். அ.தி.மு.க.வில் ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவை இணைத்தால் தனது பொதுச் செயலாளர் பதவிக்கு பிரச்சினை வரும் எனக் கருதி, இபிஎஸ் அவர்களை ஏற்க மாட்டார் என்று கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
எனக்கு என்னமோ திருப்திப்படல: அண்ணாமலை
கடந்த சில நாள்களாக தேசிய ஜனநாயக கூட்டணியில் நடக்கும் நிகழ்வுகள் திருப்தியாக இல்லை என அண்ணாமலை கூறியுள்ளார். டிடிவி தினகரன் விலகல், செங்கோட்டையனின் பொறுப்பு பறிப்பால் அ.தி.மு.க.வில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் ஆகியவை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு புதிய நெருக்கடியாக அமைந்துள்ளது. எனவே, புதிதாக ஒரு கட்சியை அழைப்பதை விட, இருப்பதை வைத்து கூட்டணியை வலுப்படுத்துவது எப்படி என்பதையே பார்க்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
வாக்குச்சீட்டை கண்டு பாஜக பயப்படுவது ஏன்? காங்.,
கருநாடகாவில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல்களில் மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு பதில் வாக்குச்சீட்டு முறையை பரிந்துரைக்க அம்மாநில காங்., அரசு முடிவு செய்துள்ளது. இது கற்காலத்துக்கு கொண்டு செல்வதாக பாஜக குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், வாக்குச்சீட்டை கண்டு பா.ஜ.க. பயப்படுவது ஏன்? என முதலமைச்சர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக, வாக்குத்திருட்டில் ஈடுபடுவதாக காங்., தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.
0% வரிவிதித்த டிரம்ப்…
எந்தெந்த நாடுகளுக்கு தெரியுமா?
எந்தெந்த நாடுகளுக்கு தெரியுமா?
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு, டிரம்ப் 0% வரிவிதித்துள்ளார். ஜப்பான், அய்ரோப்பிய நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கம், கிராஃபைட், டங்ஸ்டன், யுரேனியம் உள்ளிட்ட 45 வகையான பொருள்களுக்கு 0% வரிவிதித்துள்ளார். இந்தியாவிற்கு 50% வரிவிதித்துள்ள நிலையில், பல நாடுகளுக்கு சலுகைகளை அறிவித்துள்ளார்.