இமயமலைத் தொடரில் உள்ள மூன்று மாநிலங்கள் ஹிமாச்சல், ஜம்மு காஷ்மீர், உத்தராகண்ட், சமவெளியில் பஞ்சாப்.
இமயமலையில் உள்ள ஆறுகளில் பெரும் பாலானவை பஞ்சாப் வழியாக ஓடுகிறது.
உலகின் இளம் மலைத்தொடர்களில் ஒன்று இமயமலை ஆகும். இது இயற்கை அழகு, உயிரின வளம் மற்றும் நீர் வளங்களின் களஞ்சியமாகத் திகழ்கிறது.
இருப்பினும், அண்மைக் காலங்களில், ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தராகண்ட் போன்ற மாநிலங்களில் ஏற்படும் மேக வெடிப்புகள் (cloudbursts), வெள்ளங்கள் மற்றும் கனமழை சேதங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தப் பேரிடர்களுக்கு புவி வெப்பமயமாதல் முக்கியக் காரணியாக இருந்தாலும், அரசின் சுயநல நடவடிக்கையே முக்கியப் பங்கு வகிக்கின்றன.
குறிப்பாக, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மலைப் பகுதிகளை குத்தகைக்கு வழங்கியதால் ஏற்படும் மரம் வெட்டுதல், அணை கட்டுமானம், சாலை விரிவாக்கம் போன்ற செயல்கள் சுற்றுச்சூழல் சமநிலையை சீர்குலைத்து, இந்தப் பேரிடர்களை தீவிரமாக்குகின்றன.
இமயமலைப் பகுதிகள் புவியியல் ரீதியாக உணர்திறன் மிக்கவை. இங்கு பருவமழை காலங்களில் கனமழை, மேக வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் அடிக்கடி ஏற்படுகின்றன. 2025ஆம் ஆண்டில், ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக ஹிமாச்சல் பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீரில் பெரும் சேதங்கள் ஏற்பட்டன. இந்தப் பேரிடர்களுக்கு பருவநிலை மாற்றம் ஒரு காரணமாக இருந்தாலும், கார்ப்பரேட் நிறுவனங்களின் செயல்பாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
அரசு, சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு வனம் மற்றும் மலைப்பகுதி பாதுகாப்பு முறைகளில் சட்டதிருத்தம் கொண்டுவந்து கார்ப்பரேட்டுகளுக்கு மலைப்பகுதிகளை குத்தகைக்கு வழங்கியுள்ளது. இதன் விளைவாக, உணவகங்கள், அணைகள், சாலைகள் கட்டுவதற்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. இது மண் அரிப்பு மற்றும் வெள்ள அபாயத்தை அதிகரிக்கிறது.
சாலைகள் மற்றும் பிற கட்டுமானப் பணிகளுக்காக மலைகள் வெட்டப்படும்போது, மண் தளர்ந்து எளிதில் அரிப்புக்குள்ளாகிறது.
நீர்வழித்தடங்களில் மாற்றம்: மலைகளில் உள்ள நீர்வழித்தடங்கள், நீர் மின் திட்டங்கள் மற்றும் சாலை அமைப்பிற்காக மாற்றியமைக்கப்படுகின்றன. இது இயற்கையான நீரோட்டத்தைப் பாதித்து, வெள்ள அபாயத்தை அதிகரிக்கிறது.
இந்த நடவடிக்கைகள், மலைகளின் நிலைப்புத் தன்மையைக் குலைத்து, கனமழை போன்ற நிகழ்வுகளின் போது நிலச்சரிவுகளையும், வெள்ளப்பெருக்கையும் எளிதில் ஏற்படுத்துகின்றன.
மேகவெடிப்பும், வெள்ளமும்!
அண்மையில் இந்த மாநிலங்களில் ஏற்பட்ட மேக வெடிப்புகள் மற்றும் கனமழை, பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளன. பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகள் மற்றும் உள்கட்டமைப்புகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இந்த நிகழ்வுகள் இயற்கை யானவை அல்ல.
ஒன்றிய அரசின் கார்ப்பரேட் நலனுக்காக உருவாக்கப்பட்ட விதிமீறல் சட்ட திருத்தம் என்றும், மனிதர்களின் பேராசை மற்றும் பொறுப்பற்ற செயல்களே இதற்கு முக்கியக் காரணம் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
மரங்களை வெட்டுதல், மலைகளை குடைந்து சுரங்கங்கள் அமைத்தல், முறையற்ற கட்டுமானம் போன்ற செயல்பாடுகள், இந்தப் பகுதிகளின் சுற்றுச்சூழல் சமநிலையை முற்றிலுமாக சிதைத்துவிட்டன. இதன் காரணமாக, சிறிய அளவிலான மழை கூட மிகப்பெரிய வெள்ளப் பெருக்கையும், நிலச்சரிவுகளையும் உருவாக்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
நீண்டகால விளைவுகள்
மற்றும் எதிர்கால சவால்கள்
தற்போது ஏற்பட்டுள்ள சேதங்கள் ஒருபுறம் இருக்க, இந்தப் பாதிப்புகளின் நீண்டகால விளைவுகள் இன்னும் மோசமானதாக இருக்கும். இந்த மலைப்பகுதிகளின் பல்லுயிர் வளம் பாதிக்கப்படும். விவசாய நிலங்கள் சேதமடையும், மற்றும் மக்கள் தங்கள் வாழ்வாதாரங் களை இழப்பார்கள்.
உறவு, பொருள், விளைபயிர் என அனைத்தையும் வெள்ளத்தில் பறிகொடுத்து கண்ணீர் விட்டு அழும் பஞ்சாபி மூதாட்டி
உடனடியாக கடுமையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்த வேண்டியது அவசியம். இல்லையெனில், இமயமலையின் எழில்மிகு பகுதிகள், பேரிடர்களின் களமாக மாறும்.
சமீபத்திய சம்பவங்கள்
2025ஆம் ஆண்டில், இமயமலைப் பகுதிகளில் பல பேரிடர்கள் ஏற்பட்டன:
ஆகஸ்ட் 14, 2025: ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பில் 67 பேர் உயிரிழந்தனர், பலர் ஆன்மிக சுற்றுலாப் பயணிகள்.
ஆகஸ்ட் 5, 2025: உத்தராகண்டின் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டு, வீடுகள், கடைகள் மற்றும் சாலைகள் அழிந்தன. 5 பேர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போனார்கள்.
ஆகஸ்ட் 27, 2025: ஜம்முவில் கனமழை காரணமாக 36 பேர் உயிரிழந்தனர். அணைகள் திறக்கப்பட்டதால் வெள்ளம் தீவிர மடைந்தது.
ஹிமாச்சல் பிரதேசத்தில், மண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் நீரோடைகள், மின் மாற்றிகள் அழிந்தன.
இந்த நிகழ்வுகள் 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் அதிகரித்துள்ளன. மேக வெடிப்புகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
குத்தகை வழங்கல்: அரசு, சுற்றுலா, மின்சாரம் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங் களுக்காக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மலைப் பகுதிகளை குத்தகைக்கு வழங்கியுள்ளது. இதன் விளைவாக, உணவகங்கள், அணைகள் மற்றும் சாலைகள் கட்டப்படுகின்றன.
மரம் வெட்டுதல்: இந்தத் திட்டங் களுக்காக மரங்கள் வெட்டப்படுவதால், மண் அரிப்பு அதிகரிக்கிறது. ஹிமாச்சல் பிரதேசத்தின் காங்ரா, குல்லு மற்றும் சம்பா மாவட்டங்களில் மரம் வெட்டுதல் அதிகம் இது சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.
உள்கட்டமைப்பு திட்டங்கள்: சாலை விரி வாக்கம், அணை கட்டுமானம் போன்றவை மலைகளின் சரிவுகளை சீர்குலைக்கின்றன. உதாரணமாக, சார் தாம் திட்டத்தில் சாலைகள் அகலப்படுத்தப்பட்டதால் நிலச்சரிவுகள் அதிகரித்தன.
கனமழை அதிகரிப்பு, பனிப்பாறை உருகுதல் போன்றவை இந்த செயல் களுடன் இணைந்து பேரிடர் களை தீவிரமாக்குகின்றன
பாதிப்புகள்
2025இல் மட்டும் 300 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
ரூ.3000 கோடிக்கு மேல் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் சேதம்: பனிப்பாறை ஏரிகள் அதிகரிப்பு (ஹிமாச்சலில் 48 உயர் அபாய ஏரிகள்), மண் அரிப்பு, உயிரின இழப்பு போன்றவைகளோடு கால்நடைகள் அழிவும் ஏற்பட் டுள்ளது.
விவசாயம், சுற்றுலாத் துறைகள் பாதிக்கப்படுகின்றன. வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள் அழிந்தன.
உச்சநீதிமன்றம், சட்டவிரோத மரம் வெட்டுதலை கண்டித்துள்ளது. “இப்படி தொடர்ந்தால் காடுகள் இல்லாமல் போய் விடும்” என்று எச்சரித்தது.
அரசு, பேரிடர் மேலாண்மை திட்டங் களை வலுப்படுத்த வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், குத்தகை வழங்கல் தொடர்கிறது. இது மனிதனால் உருவாக்கப் பட்ட பேரிடர்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கார்ப்பரேட் குத்தகை மற்றும் மரம் வெட்டுதல் போன்ற செயல்கள் இமய மலைப் பகுதிகளின் சுற்றுச்சூழலை அழித்து, பேரிடர்களை அதிகரிக் கின்றன.