காலக்கெடு முடிவடைந்தும் மெட்டா (முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம், வாட்ஸப்), ஆல்ஃபாபெட் (யூடியூப்), எக்ஸ், ரெட்டிட் மற்றும் லின்க்ட் இன் ஆகிய நிறுவனங்கள் தங்களது சமூக வலைதளங்களை பதிவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பதிவு செய்யாத நிறுவனங்களின் சமூக வலைதளங்கள் அனைத்தும், (செப்.4) நள்ளிரவு முதல் நேபாளத்தில் தடை செய்யப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதில், டிக்டாக் நிறுவனம் பதிவு செய்ய பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், டெலிகிராம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேபாள அரசின் இந்த நடவடிக்கை குறித்து மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் தற்போது வரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காசாவில் செய்தியாளர்கள் கொல்லப்படும் கொடுமை!
காஸாவில் இஸ்ரேல் ராணுவத் தாக்குதலில் செய்தியாளா்கள் உயிரிழந்து வரும் சம்பவங்கள் அதிா்ச்சியளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஸாவிலுள்ள மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் அண்மையில் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 செய்தியாளா்கள் உள்பட 20 போ் உயிரிழந்தனா்.
முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில் அல்-ஜஸீரா செய்தியாளா் ஒருவரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் அவா் உள்பட 6 செய்தியாளா்கள் கொல்லப்பட்டனா். அப்போது செய்தியாளரை கொலை செய்யும் நோக்குடன் தாக்குதல் நடத்தப்பட்டதை இஸ்ரேல் ராணுவம் ஒப்புக் கொண்டது. இதற்கு பன்னாட்டு அளவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இந்நிலையில் புதுடில்லியில் செய்தியாளா்களைச் சந்தித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘போரில் பொதுமக்கள் கொல்லப்படுதை இந்தியா தொடா்ந்து கண்டித்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளா்கள் பலரும் தாக்குதலில் உயிரிழப்பது பெரும் அதிா்ச்சியளிக்கும் தகவலாக உள்ளது.