தமிழ்நாட்டுக்குக் கல்வி நிதி ஒதுக்க மறுத்தது ஏன்? ஒன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

2 Min Read

புதுடில்லி, செப்.2- தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி ஒதுக்க மறுத்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி நிதி

‘சமக்ர சிக்சா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க ஒன்றிய அரசு மறுத்துவிட்டது. இதன் காரணமாக கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை தொடங்கவில்லை. இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஒன்றிய அரசிடம் இருந்து நிதி கிடைக்கவில்லை என்று கூறாமல் தனியார் பள்ளிகளுக்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.

மேல்முறையீடு

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் வழக்குரைஞர் சபரீஷ் சுப்பிரமணியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது சமக்ரா சிக்‌ஷா கல்வி நிதி விவகாரம் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

ஒன்றிய அரசுக்கு அறிவிக்கை

இதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆஜராகி, 2021-2022, 2022-2023 கல்வியாண்டுகளுக்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய பங்களிப்பு நிதி 342.69 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசுக்கு விடுவிக்கவில்லை.இருந்தாலும் தமிழ்நாடு அரசு செலவினத்தை ஏற்றுள்ளது’ என வாதிட்டார். இந்த மனுவுக்கு பதில் அளிக்க ஒன்றிய அரசுக்கும் மூலமனுதாரர் ஈஸ்வரனுக்கும். அறிவிக்கை அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

ஆகஸ்டில் ஜிஎஸ்டி வருவாய் சரிவு

புதுடில்லி, செப்.2 கடந்த ஆகஸ்டில் சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) ரூ.1.86 லட்சம் கோடி வசூலானது. இது கடந்த ஜூலையில் வசூலான ரூ.1.96 லட்சம் கோடியைவிட குறைவாகும்.  இதுதொடா்பாக ஜிஎஸ்டி வலைதளத்தில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, கடந்த ஆகஸ்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,86,315 கோடி. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாயான ரூ.1,74,962 கோடியுடன் ஒப்பிடுகையில் 6.5% அதிகம். ஆனால் நிகழாண்டு ஜூலை மாதம் வசூலான ரூ.1.96 லட்சம் கோடி ஜிஎஸ்டியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *