அய்ரோப்பாவும் இந்தியா மீது வரிவிதிக்க வேண்டுமாம்: அமெரிக்கா
அமெரிக்காவை போல அய்ரோப்பிய நாடுகளும் இந்தியா மீது வரிவிதிக்க வேண்டும் என வெள்ளை மாளிகை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இந்தியாவில் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு வாங்குவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. பிரதமர் மோடி – ஜிங்பிங் சந்திப்பிற்கு மத்தியில் அமெரிக்கா இவ்வாறு தெரிவித்துள்ளது. முன்னதாக, ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை வளர்ப்பதாக இந்தியா மீது 50 விழுக்காடு வரிவிதித்தது.
விண்வெளியில் கத்தினால் கேட்குமா?
ஒரு மலையிலிருந்து கத்தினால், அந்த ஒலி எதிரொலிப்பதை நாம் படத்தில் பார்த்திருக்கிறோம். நாமே உணரவும் அதேபோல விண்வெளியில் கத்தினால் அந்த ஒலி கேட்குமா என்றால், இல்லை என்கிறது அறிவியல். ஓசையைக் கடத்துவதில் காற்று இன்றியமையாததாக இருக்கிறது. விண்வெளியில் காற்று இல்லை என்பதால் இங்கு கத்தினால் கேட்காதாம். இதனால் தான், பெரிய பெரிய நட்சத்திர வெடிப்பு ஏற்பட்டால் கூட அங்கு ஓசை கேட்காது என சொல்கின்றனர்.
60% ஊழியர்களை
நீக்கும் எம்.பி.எல்.
‘ஆன்லைன் கேமிங்’ நிறுவன மான மொபைல் பிரீமியர் லீக் (MPL), இந்தியாவில் தனது 60 விழுக்காடு ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இணையத்தில் பணம் கட்டி விளையாடும் போட்டிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதால், வருவாய் இழப்பைச் சமாளிக்க இந்த முடிவை எடுத்துள்ளது. ஆன்லைன் கேமிங் தடை சட்ட மசோதா தற்போது சட்ட மாகியுள்ளது. இதன்படி, ஆன்லைன் கேமிங் சேவைகளை வழங்கினால் 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும்.