புதுடில்லி, ஆக. 30– ஒரு வழக்கில் 22 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடந் திருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், குற்ற வழக்கு ஒன்றை நியாயமற்ற காலத்துக்கு நீட்டிப்பது ஒரு வகை துன்பம் என கூறினர்
தமிழ்நாட்டில் ஒன்றிய கலால் வரி ஆய்வாளராகப் பணியாற்றிய பெண் அதிகாரி ஒருவர் கடந்த 2002ஆம் ஆண்டு ரூ.300 லஞ்சம் கேட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், 31 நாள்கள் சிறையிலும் இருந்தார். அவருக்கு தற்போது வயது 75. ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட இந்த வழக்கை விசாரித்த விசா ரணை நீதிமன்றம், பெண் அதிகாரிக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், பெண் அதிகாரிக்கு கீழ்மை நீதிமன்றம் விதித்த தண்டனையை கடந்த 2010ஆம் ஆண்டு உறுதி செய்தது. எனவே உச்சநீதிமன்றத்தில் அந்த பெண் அதிகாரி மேல் முறையீடு செய்தார்.
இதை நீதிபதிகள் அஞ்சாரியா, சந்துர்கர் அமர்வு விசாரித்தது.பின்னர் இதில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், பெண் அதிகாரி அனுபவித்த 31 நாள் சிறையை அவரது தண்டனைக் காலமாகக் கணக்கிட்டு தண்டனையைக் குறைத் தனர். அதேநேரம் அப ராத தொகையில் ரூ.25 ஆயிரம் உயர்த்திய நீதிபதிகள், அதை அடுத்த மாதம் 10ஆம் தேதிக்குள் செலுத்தவும் உத்தரவிட்டனர். தவறினால் கீழ்மை நீதிமன்றம் வழங்கிய சிறைத் தண்டனயை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறினர்.
இந்த வழக்கில் 22 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடந் திருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், குற்ற வழக்கு ஒன்றை நியாயமற்ற காலத்துக்கு நீட்டிப்பது ஒரு வகை துன்பம் என கூறினர். தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் நபர் தினமும் அந்த வழக்கின் தீர்ப்புக் காகக் காத்திருந்து, துயரத்தில் நேரத்தைச் செலவிடுகிறார் என்று கூறிய நீதிபதிகள், இது குற்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நபருக்கு மன ரீதியான சிறைத்தண்டனையாக இருக்கும் எனவும் தெரிவித் தனர்.
இன்றைய நீதி நிர்வாக முறையில், நடவடிக்கைகள் பெரும்பாலும் நியாயமற்ற தாகவும், தாங்க முடியாத அளவுக்கு தாமதமாக நீடித்தும் வருகின்றன எனவும், எனவே நீண்ட காலம் கடந்து செல்வது ஒரு நபரை மன வேத னைக்கு ஆளாக்குகிறது என்றும் கூறினர்.