மூடநம்பிக்கையின் கொடூரம்! பேரனை நரபலி கொடுத்த தாத்தா

2 Min Read

பிரயாக்ராஜ், ஆக. 30– மந்திர வாதியின் பேச்சைக் கேட்டு, பேரனின் தலையை துண்டித்து நரபலி கொடுத்த தாத்தா கைது செய்யப்பட்டார்.

உலகம் நாகரிக வளர்ச்சி அடைந் தாலும், மூடநம்பிக்கையில் இருந்து இன்னமும் ஒரு சிலர் விடுபடவே இல்லை என்ப தற்கு உதாரணமாக நடந்த இந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

 உடல் பாகங்கள்

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக் ராஜ் பகுதியை சேர்ந்தவர் காமினி, இவ ருடைய மகன் பியூஷ் (வயது 17), அங்குள்ள சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற பியூஷ் வீடு திரும்ப வில்லை. இதனால் பதற்றம் அடைந்த காமினி, தனது மகனை காணவில்லை என்று காவல் துறையில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பியூஷை தேடி வந்தனர்.

இந்தநிலையில் அங்குள்ள ஒரு ஓடையில் துண்டிக்கப்பட்ட தலை கிடப்பதாக வந்த தகவலையடுத்து காவல் துறையினர் அங்கு சென்று, அந்த தலையை மீட்டனர். பின்னர் அதே ஓடையின் வெவ்வேறு பகுதி களில் மற்ற உடல் பாகங்கள் தனித் தனியாக கிடந்தன. அவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.

தாத்தா கைது

கைப்பற்றப்பட்ட உடல் பாகங் களையும், காமினி கூறிய அடை யாளத்தையும் வைத்து காவல் துறையினர் ஒப்பிட்டு பார்த்தபோது, அது மாயமான மாணவர் பியூஷ் என்பதை உறுதி செய்தனர்.

பின்னர் நடத்திய விசா ரணையில், யாரோ ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் துணியால் சுற்றப்பட்ட எதையோ அந்த ஓடையில் வீசிச்சென்றதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். அவர்கள் கூறிய அடையாளத்தை வைத்து, அதே பகுதியை சேர்ந்த சரண் சிங் என்பவரை காவல் துறையினர் தேடினர். அவருடைய தம்பியின் பேரன்தான் பியூஷ் என்பது விசாரணையில் தெரியவந்தது.

பிரயாக்ராஜில் உள்ள கரேலியில் பதுங்கி இருந்த சரண் சிங்கை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் தனது தம்பியின் பேரனை கொன்றதை ஒத்துக்கொண்டார்.

நரபலி

பின்னர் காவல்துறை யினரிடம் அவர் கூறியதாவது:- என்னுடைய மகன் கடந்த 2023-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு அடுத்த ஆண்டு என்னுடைய மகளும் தற்கொலை செய்து கொண்டனர்.

எனது குடும்பத்துக்கு யாரோ கெடுதல் செய்து இருப்பதால்தான் இவ்வாறு நடந்துவிட்டது என்று சிலர் கூறினர். இதனால் அதனை சரிசெய்ய உள்ளூரில் இருக்கும் மந்திரவாதி ஒருவரை சந்தித்தேன். அவர் உனது தம்பியின் பேரனால்தான் உனக்கு இந்த துன்பம் நேர்ந் துள்ளது. அவனை கொன்றுவிட்டாலஎல்லாம் சரியாகிவிடும் என்றார்.

அவரது ஆலோசனைப் படி, பியூசை நரபலி கொடுக்க முடிவு செய்தேன். இதையடுத்து பியூசை கடத்தி, அவனது தலையை துண்டித்து கொன்றேன். பின்னர் உடல் பாகங்களையும் துண்டு, துண்டாக வெட்டி ஓடையில் வீசி னேன். இவ்வாறு அவர் கூறினார்.

கைது

இதையடுத்து சரண்சிங்கை காவல்துறை யினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நரபலி சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *