தருமபுரி, ஆக. 29- மேனாள் ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட திமுக செயலாளர், திமுக மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சின்னசாமி அவர்களின் மறைவிற்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, அரூர் கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
மாநில ஒருங்கிணைப்பா ளர் ஊமை.ஜெயராமன் தலைமையில், தருமபுரி மாவட்டத் தலைவர் கு.சரவணன், தருமபுரி மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன், அரூர் கழக மாவட்டத் தலைவர் விடுதலை அ.தமிழ்ச் செல்வன், கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் கோ. திராவிடமணி ஆகியோரின் ஒருங்கிணைப்பில்,
திமுக மேனாள் மாவட்டச் செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி, மாநில மகளிரணி செயலாளர் தகடூர்.தமிழ்ச்செல்வி, மேனாள் மதிமுக இணை அமைச்சர் செஞ்சி இராமச்சந்திரன், கிருஷ்ணகிரி வேப்பனப் பள்ளி மேனாள் திமுக சட்டமன்ற உறுப்பினர், திமுக சி.செல்வராஜ், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை, அரூர் பக மாவட்டத் தலைவர் சா.இ ராஜேந்திரன், மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி.கருணா நிதி மாவட்டத் துணைத் தலைவர் இளை.மாதன், தருமபுரி மேனாள் மாவட் டத் தலைவர் மு.பரமசிவன், நகரத் தலைவர் கரு.பாலன், தொழிலாளர் அணி மாவட்டத் தலைவர் சிசுபாலன், தொழிலாளர் அணி மாவட்டச் செயலா ளர் பெ.மாணிக்கம், இளை ஞரணி நகரத் தலைவர் கண்.இராமச்சந்திரன்,
கடத்தூர் ஒன்றிய செயலாளர் பச்சியப்பன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் க.சின்னராஜ், பாப்பாரப்பட்டி நகரத் தலைவர் மா.சுந்தரம், ஆசிரியர் நரசிம்மன் மற்றும் அனைத்துக் கட்சிகள் நிர்வாகிகள், பொதுமக்கள், வணிகர்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டு இரங் கலை தெரிவித்து மரியாதை செலுத்தினர்.