இலங்கை கொடூரத்திற்கு அளவே இல்லையா? தட்டிக் கேட்க ஒன்றிய அரசுக்குத் துப்பில்லையா? ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேருக்கு ரூ.5.37 லட்சம் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு!!

2 Min Read

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேருக்கு ரூ.5.37 லட்சம் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு!!

ராமநாதபுரம், ஆக.28- ஆக.9இல் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேருக்கு இலங்கை நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்ட நிலையில், அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற 55 நாட்களில் 61 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்தும், மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (26.8.2025) இலங்கை மன்னார் நீதிமன்ற நீதிபதி முன் 7 மீனவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மீனவர்கள் 7பேர் மீதும் மன்னார் மீன்வளத்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி 6 மீனவர்களுக்கு ரூ.87,000 அபராதம் விதித்தார். மேலும், இருதய நோயால் பாதிக்கப்பட்ட மற்றொரு மீனவருக்கு ரூ.14,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த அபராத தொகையை மீனவர்கள் செலுத்தத் தவறினால் 6 மாதம் சிறைத் தண்டனை என்றும் தெரிவித்தார். மேலும் மீனவர்கள் பயன்படுத்திய மீன்பிடி படகுக்கான விசாரணை வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.

தமிழ்நாட்டில் 6 கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ்

பணிகளை மேற்கொள்ள ரூ.24 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை, ஆக.28- திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி, குலசேகரப்பட்டினம், கீழ்புதுப்பட்டு மற்றும் சாமியார் பேட்டை ஆகிய 6 கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சிறப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

2025-2026ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையின் போது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் தங்கம் தென்னரசு உரையின் போது திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம், விழுப்புரம் மாவட்டம் கீழ்புதுப்பட்டு மற்றும் கடலூர மாவட்டம் சாமியார்பேட்டை ஆகிய 6 கடற்கரைகள் நீலக்கொடி சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது பற்றிக் குறிப்பிட்டார்.

இந்த சான்றிதழ் ஒரு கடற்கரையின் தூய்மை, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பராமரிப்பு மற்றும் இடைத்திறன்கள் போன்ற பன்னாட்டு நிலைகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில் அந்த கடற்கரைகளுக்கு மட்டுமே இதுவரை வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடல் நீர் தரம், சுற்றுச்சூழல் கல்வி, சுற்றுச்சூழல் மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் சேவைகள் ஆகிய 33 விதமான விதிகளை பூர்த்தி செய்து நீலக்கொடி சான்றிதழ் உறுதி பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *