மாநில சுயாட்சிக்கு உச்சநீதிமன்றம் ஆதரவு போர் போன்ற அவசர நிலைக் காலங்களில் வேண்டுமானால் மாநில விவகாரங்களில் ஒன்றிய அரசு தலையிடலாம் உச்சநீதிமன்றம் கருத்து

1 Min Read

புதுடில்லி, ஆக.28- சட்ட மசோதாக்களுக்கான கால நிர்ணயம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசின் வாதத்திற்கு பதில் என்ன என்று ஒன்றிய அரசுக்கு உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

சட்ட மசோதாக்களுக்கான கால நிர்ணயம் மீது குடியரசு தலைவர் கேள்வி எழுப்பிய வழக்கில், 26.8.2025 அன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது.  இந்த நிலையில் இன்றைய வழக்கு விசாரணையில், ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அடுக் கடுக்கான கேள்விகளை எழுப்பியது.

2ஆவதாக ஒரு மசோதா நிறைவேற்றி அனுப்பினால் அதனை ஆளுநர் திருப்பி அனுப்ப முடியுமா?. ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் உள்ளதா?. மாநில அரசு நிறைவேற்றிய மசோதாவை ஒன்றிய அரசு திருப்பி அனுப்ப இயலுமா? அதன் விளைவுகள் என்ன? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சட்டமன்றத்தில் 2ஆவது முறையாக நிறைவேற்றி அனுப்பும் மசோதாவை ஆளுநர் குடியரசுத்தலைவருக்கு அனுப்ப இயலாது, ஒப்புதல் அளிப்பதை தவிர வேறு வழியில்லை என்ற தமிழ்நாடு அரசின் வாதத்திற்கு என்ன பதில் என்றும் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

“போர் போன்ற அவசர நிலைக் காலங்களில் வேண்டுமானால் தேசிய ஒற்றுமை, ஒருமைப்பாடு என்ற அடிப்படையில், மாநில விவகாரங்களில் ஒன்றிய அரசு தலையிடலாம். ஆனால், சாதாரண நேரங்களில் மத்திய சட்டங்களுடன் முரணாக இல்லாத மாநில அரசின் மசோதாவில் எப்படி தலையிட முடியும்?” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. குடியரசு தலைவர் ஒன்றிய அமைச்சரவையின் ஆலோசனைப்படி செயல்படுவது போல் மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப் பட்டவர் தானே? என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், ஆளுநர் மசோதாவை ஏன் நிறுத்தி வைத் துள்ளார் என்று நீதிமன்றம் கேள்வி கேட்கலாம் என்றும் தெரிவித் துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *