புதுடில்லி, ஆக. 27- மாற்றுத்திறனாளிகள், அரிய மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரை தங்கள் நிகழ்ச்சிகளில் கேலி யாக பேசியதாக 5 சமூக வலைத்தள பிரபலங் களுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் சமய் ரெய்னா என்பவரும் ஒருவர்.
கடந்த மாதம் 15ஆம் தேதி நடந்த விசார ணையின்போது, 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், 25.8.2025 அன்று நீதிபதிகள் சூர்ய காந்த், ஜாய்மால்யா பக்சி ஆகியோர் அடங் கிய அமர்வு முன்பு இவ் வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப் பட்டவர்களில் ஒருவ ரான சோனாலி தக்கர், தனது நிகழ்ச்சியில் நிபந் தனையற்ற மன்னிப்பு ஒலிபரப்பப்படும் என்று உத்தரவாதம் அளித்ததால், அவர் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. மற்ற 4 பேரும் ஆஜாராகி இருந்தனர். அப்போது அவர்களிடம் நீதிபதிகள் கூறியதாவது:-
பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் ஆகியவை இதர சமூகத் தினரின் உணர்வுகளை புண் படுத்தும் வணிக பேச்சுக்கு பொருந்தாது. நீங்கள் மாற்றுத்திறனாளிகளை கேலி பேசியதற்காக உங்கள் நிகழ்ச்சிகளில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். உங் களுக்கு அபராதம் விதிப்பது பற்றி பின்னர் பரிசீலிக்கப்படும். அதே சமயத்தில், மாற்றுத் திறனாளிகள், பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் ஆகி யோரை அவமதிக்கும், கேலி செய் யும் பேச்சுகளை தடை செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறை களை ஒன்றிய அரசு உருவாக்க வேண்டும். அந்த நெறிமுறைகள், ஒரு குறிப்பிட்ட சம்பவத் துக்கான எதிர் வினை யாக இல்லாமல், அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் சேர்த்து, பரந்த அளவுகோல்கள் அடிப்படையில் இருக்க வேண்டும். பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த சமய் ரெய்னா, தன்னை அப்பாவி போல் காட்டிக் கொள்கிறார். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.