தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (25.8.2025) சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகம் எதிரில் அமைந்துள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், துணை மேயர் மு. மகேஷ் குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே. ராஜாராமன், சென்னை இதழியல் நிறுவனத்தின் சிறப்பு பணி அலுவலர் எஸ்.ஏ. ராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு. இரா. வைத்திநாதன், மாநில திட்டக்குழு செயல் துணைத் தலைவர் முனைவர் ஜெயரஞ்சன், சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் நிருவாகக் குழுத் தலைவர் என். ரவி, தலைமை இயக்குநர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தின் துணைத் தலைவர் இமையம், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவர் டிராட்ஸ்கி மருது, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைத் துறையை சார்ந்த நக்கீரன் கோபால், திருமாவேலன், கார்த்திகை செல்வன், சுரேஷ் குமார், மு.குணசேகரன், சமஸ், லட்சுமிசுப்பிரமணியன், காமராஜ், நிருபன் சக்கரவர்த்தி, உள்ளிட்ட ஊடகவியலாளர்கள், வழக்குரைஞர் காந்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். (செய்தி 7ஆம் பக்கம் காண்க)