கதிகார், ஆக.24 காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி, வாக்கு திருட்டுக்கு எதிராக பீகாரில் வாக்காளர் உரிமைப் பயணம் நடத்தி வருகிறார். இதில் கதிகாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், பா.ஜனதா மற்றும் தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடினார்.
அவர் கூறுகையில், ‘அதிகாரத் தையும் செல்வத்தையும் குவிப்பதை ஊக்குவிப்பதன் மூலம் அரசியலமைப்பை அழிக்க முயற்சிக்கும் பா.ஜனதா, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான் மையினருக்கான வாய்ப்புகளின் கதவுகளை மூடியிருக்கிறது. பின்தங்கிய பிரிவினரை மேம்படுத்த அவர்கள் விரும்பவில்லை’ என குற்றம் சாட்டினார்.
மேலும் அவர், ‘எனவே மக்களின் வாக்குகளை திருட முயற்சிக்கிறார்கள். அந்தவகையில் கர்நாடகா, மராட்டியம், அரியா னாவில் முன்பு வாக்குகளை திருடி னார்கள். தற்போது பீகாரிலும் அதை முயற்சிக்கிறார்கள். எனவே நாங்கள் இந்த வாக்காளர் உரிமைப் பயணத்தை நடத்துகிறோம்’ என் றும் கூறினார்.