ஆளுநர் தன் கடமையை செய்யா விட்டால் நீதிமன்றம் தலையிடக்கூடாதா? : உச்ச நீதிமன்றம் கேள்வி

3 Min Read

புதுடில்லி, ஆக. 23- ஆளுநர் போன்ற அரசமைப்பு சாசன பதவியில் இருப்போர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் கடமையை செய்யாவிட்டால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூற முடியுமா என ஒன்றிய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.

3-ஆவது நாளாக விசாரணை

மாநில அரசுகள் அனுப்பும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இதுதொடர்பாக 14 கேள்விகளை எழுப்பி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்த விவகாரத்தை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துருக்கர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்றுமுன்தினம் (21.8.2025) 3-ஆவது நாளாக விசாரித்தது.

4 வாய்ப்புகள்

அப்போது ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டபோது கூறியதாவது:

‘மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித் தல், ஒப்புதல் அளிக்காமல் இருத்தல், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தல் அல்லது சட்டமன்றத்துக்கு மீண்டும் அனுப்பி வைத்தல் என்ற 4 வாய்ப்புகளும் ஆளுநருக்கு உள்ள சுதந்திரமான வாய்ப்புகள். அவர் அமைச்சரவையின் ஆலோசனைபடி நடக்க வேண்டுமா? அல்லது விருப் புரிமையுடன் செயல்பட முடியுமா? இதற்கான எல்லை என்ன? என்பதே கேள்வியாக உள்ளது.

அமைச்சரவை இல்லாத நேரத் திலும், தேர்தலுக்கு பிறகுபுதிய ஆட்சி அமைக்க அழைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள விருப்புரிமை அதிகாரமாகும். சில நேரங்களில் அமைச்சரவையின் ஆலோசனை கிடைக்காத சூழலும் ஆளுநருக்கு உள்ளது. ஆளுநரின் விருப்புரிமை அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்புகள் இருக்கவே செய்கின்றன.

அமைச்சரவையின் ஆலோசனை யின்படி ஆளுநர் பொதுவாக நடக்க வேண்டும் என்றாலும், ஜனநாயகத்தை காக்க சில விதிவிலக்குகளும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளன. அனைத்து விவகாரங்களையும் அரசியல் சாசன அமர்வை கொண்டு விசாரிக்க தேவையில்லை.

அரசமைப்பு சாசன சிக்கல் தொடர் பான விவகாரங்களுக்கு தீர்வுகாண உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு ஏற்படுத்தப்படுகிறது.

அரசின் ஒரு அங்கமான நீதித் துறை, மற்றொரு அங்கமான ஆளுநர்களுக்கும். குடியரசுத் தலைவருக்கும் விதிக்க முடியுமா? மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கும் குடியரசு தலைவருக்கும் உச்சநீதிமன்றம் விதித்துள்ள 3 மாத காலக் கெடு பல் வேறு மாநில அரசுகள் உச்சநீதிமன் றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்ய வழி வகுக்கும்.

நாடாளுமன்றத்தின் பணி

காலக்கெடு விதித்து சட்டத்தை திருத்துவது நாடாளுமன்றத்தின் பணி அதை உச்சநீதிமன்றம் செய்ய முடியாது. நாட்டிலுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் நீதிமன்றம் மூலம் தீர்வு காண முடியாது.அரசு கட்டமைப்பு முறையில் தான் தீர்வு காண முடியும். இது போன்ற தீர்வை ஒருங்கிணைந்தே காண முடியும்.

அரசின் ஒவ்வொரு அங்கமும் அரசியலமைப்பு சாசனத்தை பாதுகாக் கிறது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கும், குடியரசுத் தலைவ ருக்கும் உச்சநீதிமன்றம் காலக்கெடு விதிக்க முடியாது.

நாட்டின் எல்லா பிரச்சினைகளை யும் நீதிமன்றத்தில் வைத்து தீர்க்க முடியாது. பல பிரச்சினைகளுக்கு அரசே தீர்வு காண முடியும். மசோ தாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக் கெடுவை அரசமைப்பு சாசனம் விதிக்க வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

நீதிமன்றம் தலையிட…

அப்போது நீதிபதிகள், ‘ஆளுநர் போன்ற அரசமைப்பு சாசன பதவியில்  இருப்போர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் கடமையைச் செய்யாவிட்டால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூற முடியாது எனக் கூற முடியுமா? இதற்கு என்ன தீர்வு?. ஆளுநர் செயல்படாவிட்டால் அறுதிப் பெரும்பான்மையை கொண்ட சட்டமன்ற செயல்பாடுகளைச் செயலற்றுப் போகச் செய்கிறார் என்று கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டனர்.

இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மசோதாக்கள் ஆளுநரிடம் கிடப்பில் இருந்தால் அதற்கு அம்மாநில முதலமைச்சர் உடனடியாக நீதமின்றத்தில் வழக்கு தொடர்வதில்லை. மாறாக அந்த முதலமைச்சர் பிரதமரையும், குடியரசுத் தலைவரையும் சந்தித்துத் தீர்வு கண்ட எடுத்துகாட்டுகள் உள்ளன. சில நேரங்களில் தொலைபேசியில் பேசினாலே பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துவிடும்’ என வாதிட்டார்.

அரசியலமைப்பு சாசன சட்டங்க ளுக்கு விளக்கம் அளிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திடம் இருப்பது குறித்து தலைமை நீதிபதி பி ஆர்.கவாய் குறிப்பிட்டபோது, நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்துவது வேறு, அரசமைப்பு சாசனத்தில் இல்லாதவற்றை சேர்ப்பதென்பது வேறு. குடியரசுத் தலைவருக்கும், ஆளுநர்களுக்கும் காலக்கெடு விதித்ததற்கு பதில் இது தொடர்பாக சட்டம் இயற்ற நாடாளுமன்றத்தை கேட்டிருக்க முடியும். ஆனால் உச்சநீதிமன்றம் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவருக்கும், ஆளுநர்களுக்கும் காலக்கெடு விதிக்க தீர்ப்பை கூறியிருக்கக் கூடாது என துஷார்மேத்தா வாதிட்டார்.

வாதங்களைப் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் விசா ரணையை வருகிற 26-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *