மும்பை, ஆக.23 மகாராட்டிரா மாநில அரசு, வரவிருக்கும் கணபதி விழாவிற்காக, சுமார் 1,800 பஜனி மண்டல்களுக்குத் தலா ரூ.25,000 நிதியுதவி வழங்க உள்ளது. இதற்காக மொத்தம் ரூ.4.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10 நாள்கள் கழித்துக் கடலில் தூக்கிப் போடுவார்கள்
மும்பையில் சிறியது பெரியது என்று சுமார் 15 ஆயிரம் கணபதி மண்டல்கள் உள்ளன. இந்த மண்டல்கள் விநாயகன் சதுர்த்தி அன்று பிள்ளையார் சிலைகளை வைத்துவிட்டு 10 நாள்கள் கழித்துக் கடலில் தூக்கிப் போடுவார்கள்.
இதற்காக அந்த அந்த பகுதி ஹிந் துத்துவ அமைப்பின் நிர்வாகிகள் வணிக நிறுவனங்களை மிரட்டி பணம் வாங்கி கணபதி சிலை வைத்து, 10 நாள் கணபதி மண்டல்களில் இருந்துகொண்டு இரவு நேரங்களில் குடித்துவிட்டு கணபதி மண்டல்களில் ரகளை செய்தும், சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விழா முடிந்ததும், சிலைகள் கடலில் கரைக்கப்படு வதால் கடல் மாசுபடுவதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அரசு நிதி ஒதுக்குவது சரியா?
இந்தச் சூழலில், விழா மண்டல்களுக்கு அரசே கோடிக்கணக்கில் நிதி வழங்குவது குறித்தும், சமூக மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை ஏற்படுத்தும் சில நட வடிக்கைகளுக்கு அரசு நேரடியாக நிதி ஒதுக்குவதும் சரியா என்ற கேள்வியை விமர்சகர்கள் முன்வைக்கின்றனர்.