கோலாலம்பூர், ஆக. 22– மலேசிய விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் ஒன்று நேற்று (ஆகஸ்ட் 21) இரவு விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் பாஹாங் மாநிலத்தின் குவாந்தானிலுள்ள ராணுவ விமான நிலையத்தில் இரவு 9 மணியளவில் நிகழ்ந்தது.
தீப்பிடித்தது
விமானம் புறப்பட்ட உடனேயே தீப்பிடித்ததை சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொலிகள் காட்டுகின்றன. விபத்துக் கான காரணம் குறித்து யாரும் யூகிக்க வேண்டாம் என்றும், அது குறித்த முழுமையான தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் மலேசிய விமானப்படை அவசர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில், விமானியும், விமானத்தில் இருந்த ஆயுதக் கட்ட மைப்பு அதிகாரியும் உயிர் தப்பித்தனர். இரு வரும் உடனடியாக விமா னத்திலிருந்து வெளியேறிய நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர். அவர்களின் உடல் நிலை குறித்து பாஹாங் மாநிலக் காவல்துறைத் தலைவர் தகவலை உறுதிப்படுத்தினார். இந்த விபத்து குறித்து விசாரணை தொடங் கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.