மதுரையில் நடந்த த.வெ.க. 2-ஆவது மாநாட்டில் பேசிய விஜய், நான் ஒன்றும் ரிட்டயர் ஆன பிறகு அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலனோடு வந்துள்ளேன் எனத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து கமலிடம் கேட்டபோது, அவர் எனது பெயரையோ அல்லது வேறு யார் பெயரையோ குறிப்பிட்டு இந்த கருத்தை கூறாத போது, நான் ஏன் முகவரி இல்லாத கடிதத்துக்கு பதில் போட வேண்டும் என கேட்டார். மேலும் விஜய்யை தனது தம்பி என்றும் தெரிவித்தார்.