துறையூர், ஆக. 19- 2025 அக்டோபர் 4 அன்று செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க தெருமுனைக் கூட்டம். 17.8.2025 அன்று மாலை 5.30 மணிக்கு துறையூர் பேருந்து நிலையம் முன் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ச.மணி வண்ணன் தலைமையில், மாநில ப.க.அமைப்பாளர் அ.சண்முகம் வரவேற்புரையாற்றி, மாவட்ட துணைத் தலைவர் முசிறி மா. ரத்தினம். மாவட்ட இளைஞரணி தலைவர் ச. மகாமுனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக சொற்பொழிவாளர் தி.என்னாரசு பிராட்லா சிறப்புரையாற்றினார்.
மிகவும் சிறப்பாக சுயமரியாதை இயக்க வரலாறு மற்றும் இன்றைய நம் வளர்ச்சி. அதற்கு காரணம் தந்தை பெரியார். மற்றும் சுயமரி யாதை இயக்கம். திராவிடர் கழ கம் திராவிடக் கட்சிகள். தமிழர் தலை வர் ஆசிரியர் என்றும் பேசினார். சமஸ்கிருத திணிப்பு. இந்தித் திணிப்பு. சனாதன செயல்பாடு. ஒன்றிய பிஜேபி அரசின் மக்கள் விரோத போக்கை தோலுரித்து பேசினார்.
கூட்டத்தில் இ.கம்யூனிஸ்ட் கட்சி விஏஓ.செல்வம்.தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொன்னுசாமி, சேவுகன் மற்றும் கழக இளைஞரணி துணைத் தலைவர் த. ரஞ்சித் குமார். மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சு.சரண்ராஜ். மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ரெ. தன்ராஜ். மாவட்ட ப. க. தலை வர் முனைவர். பெ. பாஸ்கர், மாவட்ட ப. க. செயலாளர் பி. பிரபு, மாவட்ட ப. க. அமைப்பாளர் மு. தினேஷ். துறையூர் ஒன்றிய கழக தலைவர் இர.வரதராஜன்.உப்பிலியபுரம் ஒன்றிய கழக தலைவர் மாராடி. எம். ஏ. ரமேஷ். துறையூர் நகர கழக செயலாளர் ந.இளையராஜா.பொதுக்குழு உறுப்பினர் கோர்ட். பெ. பால கிருஷ்ணன். சிங்களாந்தபுரம் கிளைத் தலைவர் ஞான சேகரன். மாணவர் கழக ம.இனியன் சம்பத். கோர்ட். எம். ஆர். சந்திர போஸ். துறையூர் நகர ப. க. அமைப்பாளர் அ. தமிழ்செல்வன். ப. க. துணை அமைப்பாளர். க. கபில் தேவ். சபரி.மற்றும் ஏராளமான பொதுமக்கள். தொழிலாளர்கள் கலந்து கொண்டு கருத்துகளை கேட்டு தெளிவு பெற்றனர். மாவட்ட செயலாளர் ஜெ. தினேஷ் பாபு நன்றி கூறினார்.