கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

18.8.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* பாஜவுடன் கூட்டு சேர்ந்து தேர்தல் ஆணையம் முறைகேடு நாடு முழுவதும் அரங்கேறிய வாக்கு திருட்டு: பீகாரில் விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கி வைத்தார் ராகுல் காந்தி.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் பட்டியலை இணையத்தில் வெளியிட்டது தேர்தல் ஆணையம்.

* தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் பற்றி விவாதிக்க இந்தியா கூட்டணித் தலைவர்கள் இன்று டில்லியில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அலுவலகத்தில் சந்திப்பு.

தி இந்து:

* தமிழ்நாடு ஆளுநர் எதிர்க்கட்சியை விட ‘மலிவான அரசியலில்’ ஈடுபடுகிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.

தி டெலிகிராப்:

* ‘எங்களுக்கு அனுப்பப்பட்ட டிஜிட்டல் ரசீது உண்மையானது என்று கூறும் பிரமாணப் பத்திரத்தை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்,’ என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பதிலடி.

 – குடந்தை கருணா

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *