செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்பது தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவது
மேட்டுப்பாளையம், ஆக. 17- மேட்டுப்பாளையம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 16.8.2025 மாலை 6 மணி அளவில் மேட்டுப்பாளையம் வசந்தம் ஸ்டீல்சில் நடைபெற்றது
கழக மாநில ஒருங்கிணைப்பா ளர் இரா. ஜெயக்குமார் இயக்க செயல்பாடுகள் குறித் தும் பெரியார் உலகம் நிதி திரட்டுதல் அவசியம், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவது விடுதலை சந்தாக்களை புதுப்பித்து வழங்கிட வேண்டும் செங்கல்பட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்பதின் அவசியம் இளைஞரணி சார்பில் துண்டறிக்கை விநியோகம் பெரியார் சமூக காப்பு அணியில் இளைஞர்கள் மாணவர்களை அதிகம் பங்கேற்கச் செய்வது ஆசிரியர் அவர்களின் அளப்பரிய உழைப்பால் கிடைத்திட்ட பலன்கள் குறித்து தலைமை யேற்று உரையாற்றினார்
மாவட்ட தலைவர் சு.வேலுச் சாமி, மாவட்டச் செயலாளர் ரங்கசாமி, செல்வராசு, ரங்கசாமி, கோவை வடக்கு பகுதி செயலாளர் திராவிட மணி, லியாகத் அலி, தியாகராஜன் காரமடை ஒன்றிய தலைவர் அ.மு.ராஜா, தமிழ்மணி ஆகி யோர் கருத்துரையாற்றினர்
மேட்டுப்பாளையம் நகர செயலாளர் சந்திரன் நன்றி கூறினார்
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
மாவட்டத்தில் முடிவுற்ற விடுதலை சந்தாக்களை புதுப்பித் தும், புதிய சந்தாக்களை சேர்க் கும் பணியில் கழக தோழர்கள் அனைவரும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்யப்படுகிறது.
“உலகம் பெரியார் மயம் – பெரியார் உலகமயம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு திருச்சி சிறுகனூரில் 100 கோடியில் அமைய உள்ள பெரியார் உலகத் திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் நிதி திரட்டி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாள் விழாவினை ( செப் – 17 சமூகநீதி நாள்) மிக எழுச்சியோடு கொண்டாடும் வகையில், கழகத் தோழர்களின் இல்லங்களில் கழகக் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது, நகராட்சி, பேரூராட்சி, கிராம பகுதிகளில் பல்வேறு இடங்களில் தந்தை பெரியார் படங்களை அலங்கரித்து வைத்தும், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து திராவிடர்களின் திருநாளாக கொண்டாடி மகிழ்வது என முடிவு செய்யப்படுகிறது.
2025 அக்டோபர் 4 அன்று செங்கல்பட்டு மாவட்டம் மறை மலை நகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதி காத்த சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தனிப் பேருந்தில் அதிகமான கழகத் தோழர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது.
தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள் மற்றும் செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை விளக்கி நகர மெங்கும் மற்றும் புறவழிச்சாலை நெடுகிலும் சுவரெழுத்து மற்றும் சுவரொட்டி பிரச்சாரம் செய்வது என முடிவு செய்யப்படுகிறது.
செப்டம்பர் 6,7 கோபி செட்டிபாளையத்தில் நடை பெறும் பெரியார் சமூக காப்பு அணி பயிற்சியில் மாவட் டத்திலிருந்து இளைஞர்கள் மாணவர்களை பங்கேற்கச் செய்வது என முடிவு செய்யப் படுகிறது
ஆகஸ்ட் 22 அன்று தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மறைமலைநகரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டு விளக்க பரப்புரை கூட்டத்தை மேட்டுப்பாளையத்தில் மிக சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது