கொரடாச்சேரி, ஆக.17- திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் பருத்தியூர் பெரியார் படிப்பகத்தில் 14.8.2025 அன்று காலை 11:00 மணி அளவில் ஒன்றிய தலைவர் சி.ஏகாம்பரம் தலைமையில் மாவட்ட செயலாளர் சவு.சுரேஷ், மாவட்ட காப்பாளர் வீர. கோவிந்தராஜ் முன்னி லையில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் வீ. மோகன் ,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி செயலாளர் கா. வீரையன், மாவட்ட தொழி லாளர் அணி செயலாளர் நேரு ஒன்றிய செயலாளர் மு. சரவணன் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் பங்கு பெற்றனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு நிதி வசூ லித்து தருவது.
அனைத்து கிளை கழகங்களும் விடுதலை சந்தா சேர்ப்பது
தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடுவது
அக்டோபர் 4 செங் கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நடை பெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாட்டிற்கு குடும்பம் குடும்பமாக பங்கேற்பது
அனைத்து கிளைக் கழகங்களிலும் கலந்து ரையாடல் கூட்டம் நடத்துவது என தீர்மானிக் கப்பட்டது.