ஆளுநர் ஆர்.என்.ரவி – ஆளுநரா? பாஜக தலைவரா? திமுக எம்பி கனிமொழி கேள்வி

1 Min Read

சென்னை, ஆக.16 தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு, நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநராகப் பொறுப்பு வகிக்கிறாரா அல்லது பாஜக தலைவராகச் செயல்படுகிறாரா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுதந்திர நாளை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்த நிலையில், ஆளுநர் தமிழ்நாடு அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பாலியல் குற்றங்கள்

l பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: “தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. பாலியல் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.”

l போதைப்பொருள் விநியோ கம்: “அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம் நடந்து வருகிறது. கஞ்சா உட்பட ரசாயன போதைப்பொருள் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.”

lகல்வி மற்றும் சாதிய பாகுபாடு: “அரசுப் பள்ளிகளில் கல்விக் சூழல் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. பொதுப்பாதையைப் பயன்படுத்தும் பட்டியலின மக்கள் தாக்கப்படுகின்றனர். சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளாகியும் ஜாதிய பாகுபாடு நிலவுகிறது என்பது நாம் அவமானப்பட வேண்டிய ஒன்று. என ஆளுநர் குறிப்பிட்டார்.

கனிமொழியின் பதிலடி

ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு, தி.மு.க. தரப்பில் கடுமையான எதிர்வினைகள் வெளிப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் ஆளுநரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் தனது பதிவில், “தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கும் மாநிலங்கள் உத்தரப் பிரதேசம், மகாராட்டிரா, ராஜஸ்தான். இந்த மூன்று மாநிலங்களும் பாஜக ஆளும் மாநிலங்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *