புதுடில்லி, ஆக.15 ஜம்மு -காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலின்போது ஜம்மு – காஷ்மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி வழங்கப்படும் என அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்திருந்தன. இருப்பினும் தேர்தல் முடிந்து ஓராண்டாகும் நிலையில், மாநிலத் தகுதி வழங்கவில்லை. இந்நிலையில் மாநிலத் தகுதி வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் நேற்று (14.8.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது, பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, ஜம்மு – காஷ்மீரின் நிலைமையை கவ னிக்காமல் விட முடியாது என கருத்து தெரிவித்தார்.
ஒன்றிய அரசின் சார்பில் ஆஜ ரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘தேர்தலுக்குப் பிறகு மாநிலத் தகுதி வழங்கப்படும்’ என்று ஒன்றிய அரசு உறுதியளித்திருந்தது. ஆனால், இப்போது ஏன் இந்த விவ காரம் இவ்வளவு பரபரப்பாக எழுப்பப்படு கிறது? இந்த விவகாரத்தில் உரிய அறிவுறுத்தல்களை பெறுவதற்காக 8 வாரங்கள் அவகாசம் வேண்டும்’ என்றார். இந்தக் கோரிக்கையை தலைமை நீதிபதி ஏற்றுக் கொண்டு, ஒன்றிய அரசு, இந்த விவகாரத்தில் பதிலளிக்குமாறு கூறி வழக்கை 8 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.