புதுடில்லி, ஆக.13- கணினி அறிவியல் மற்றும் அது சார்ந்த படிப்புகளில் உள்ள ஆர்வத்தால், 2024-2025 கல்வியாண்டில் பி.டெக் படிப்புகளில் சேருபவர்களின் எண்ணிக்கை எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது, அதாவது நாடு முழுவதும் 12.53 லட்சம் இடங்கள் நிரம்பியுள்ளன, இது 2017-2018ஆம் ஆண்டை விட 67% அதிகமாகும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (AICTE) தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் காலியிட விகிதங்கள் வெறும் 16.36% ஆகக் குறைந்துள்ளன.
கணினி அறிவியல்
அதிக மாணவர் சேர்க்கை (3,90,245) கொண்ட படிப்புகளில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து இயந்திர பொறியியல் (2,36,909); சிவில் பொறியியல் (1,72,936); மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் (1,60,450); மற்றும் மின் பொறியியல் (1,25,902) உள்ளன.
“தொழில்நுட்பத் துறை வேலைகளின் அதிகரிப்பு காரணமாக கணினி அறிவியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய படிப்புகள் சிறந்த தேர்வுகளாக உருவெடுத்திருந்தாலும், முக்கிய பொறியியல் கிளைகள் முக்கியமானவையாகவே உள்ளன, மேலும் அவை தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை ஈர்க்கின்றன” என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸின் கேள்விகளுக்கு பதிலளித்த ஏ.அய்.சி.டி.இ தெரிவித்துள்ளது.
பி.டெக் சேர்க்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது
இது எட்டு ஆண்டுகளில் மிக உயர்ந்ததாகும், இது 2024-2025 அமர்வில் (ஆகஸ்ட் முதல் மே வரை) அங்கீகரிக்கப்பட்ட சேர்க்கை, அதாவது மொத்த இடங்களின் எண்ணிக்கை 14.90 லட்சமாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டபடி, 2024-2025ஆம் ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் இடங்களின் எண்ணிக்கையில் ஏ.அய்.சி.டி.இ விதித்திருந்த உச்சவரம்பை நீக்கியதன் விளைவாக இது நிகழ்ந்தது. இந்தக் கட்டுப்பாடு, ஒரு நிறுவனம் அதிகபட்சமாக 360 மாணவர்களை மட்டுமே சேர்த்துக்கொள்ள முடியும் என்பதையும், ஒரு திட்டத்திற்கான செல்லுபடியாகும் அங்கீகாரம் இருந்தால் மட்டுமே சேர்க்கையை அதிகரிக்க விண்ணப்பிக்க முடியும் என்பதையும் குறிக்கிறது.
2017-2018 முதல் 2021-2022 வரை அங்கீகரிக்கப்பட்ட சேர்க்கை படிப்படியாகக் குறைந்தாலும், தேவை சரிவு மற்றும் அரசாங்கத்தால் கட்டளையிடப்பட்ட வரம்புகள் காரணமாக, சேர்க்கை அன்றிலிருந்து அதிகரித்து வந்தது. 2018-2019 ஆம் ஆண்டில் 7.22 லட்சமாகக் குறைந்த சேர்க்கை, 2021-2022 முதல் அதிகரிப்பைப் பதிவு செய்யத் தொடங்கியது.
சேர்க்கை அதிகரிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஏ.அய்.சி.டி.இ, “பாடத்திட்ட மறுசீரமைப்பு மற்றும் நெகிழ்வுத் தன்மை” மற்றும் “செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், ரோபாட்டிக்ஸ், சைபர் பாதுகாப்பு, விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் பசுமை ஆற்றல் ஆகியவற்றில் புதிய யுகத் திட்டங்கள்” ஆகியவை “பொறியியல் படிப்புகளின் ஈர்ப்பைக் கணிசமாக மேம்படுத்தியுள்ளன” என்று சுட்டிக்காட்டியது.
ஜூன் மாதம் பதவிக்காலம் முடிவடைந்த முன்னாள் ஏ.அய்.சி.டி.இ உறுப்பினர் செயலாளர் ராஜீவ் குமார், மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டமே சேர்க்கை அதிகரிப்பிற்குக் காரணம் என்று கூறினார். “பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு புதிய தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவு (AI), தரவு அறிவியல், AR/VR ஆகியவை அனைத்து படிப்புகளிலும் சேர்க்கப்பட்டுள்ளன, அது முக்கிய பொறியியல் அல்லது பிற பிரிவுகளாக இருந்தாலும் சரி,” என்று ராஜீவ் குமார் கூறினார்.
இருப்பினும், ராஜீவ் குமார் மற்றும் முன்னாள் ஏ.அய்.சி.டி.இ தலைவர் எஸ்.எஸ். மந்தா இருவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.