நாடாளுமன்ற நிலைக்குழு
புதுடில்லி, ஆக.12- காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திக்விஜய் சிங் தலைமையிலான கல்வித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை வழங்கி இருக்கிறது.
இதில் முக்கியமாக இந்த கொள்கையை வெற்றிகரமாக அமல்படுத்துவதற்கு அனைத்து தரப்பினருக்கு இடையேயான ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு தேவை என கூறியுள்ளது.
குறிப்பாக கல்விக்கொள்கையின் தொலைநோக்குப் பார்வை வெற்றியடைய மாநிலங்களின் முழுமையான நம்பிக்கையை பெறுவது அவசியம் எனவும், அவற்றின் கவலைகளை போக்குவதற்கு வழிமுறையை உருவாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
உயர்கல்வியில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் முன்னேற்றத்தைக் கண்காணிக்க பல்கலைக்கழக மட்டத்தில் ஒரு பொதுவான நாடு தழுவிய கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனவும் இந்த நிலைக் குழு பரிந்துரைத்து உள்ளது.
ஆண்டி மடம் கட்டிய கதைதான்!
நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம், ஸ்டாலினுக்கு ஏன் பயம் வருகிறது என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தளியில் பேசிய அவர், தமிழ்நாட்டு மக்களுக்கு தீங்கு செய்யும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றவே ஒத்த கருத்துடைய இரு கட்சிகள் (அ.தி.மு.க. – பா.ஜ.க.) கூட்டணி அமைத்துள்ளது என்றார். மேலும், ஒன்றிய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் மாநிலத்திற்கு தேவையான நல்ல திட்டங்களை எளிமையாக நிறைவேற்ற முடியும் எனவும் கூறினார்.
ஷாக் அடிக்காதோ!?
மின்சார கட்டண பில் கட்டும்போது சில நேரங்களில் மீட்டரில் குழப்பங்கள் ஏற்படுவதால் நிறைய பிரச்னைகள் வரும். குறிப்பாக, அதிக கட்டணம் செலுத்த வேண்டியதாகிவிடும். இனி அது நடக்காமல் இருக்க மின்சார கட்டணத்தை கணக்கெடுக்க ஒரு புதிய கணக்கெடுப்பு (ரீடிங்) முறை வருகிறதாம்.
வேலையோ வேலை!
இரயில்வேயில் காலியாகவுள்ள 272 நர்சிங் சூப்பரண்டென்ட் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 20- 43 வயதுக்குட்பட்ட B.Sc Nursing படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி அடிப்படையிலான தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும். இதற்கு மாத ஊதியமாக ரூ.44,900 வழங்கப்படும். வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.