வாக்குத் திருட்டு: ராகுல் காந்தி தலைமையில் தேர்தல் ஆணையம் நோக்கி 300 எம்.பி.,க்கள் பேரணி- தடுத்து நிறுத்திய காவல்துறை!

4 Min Read

ராகுல் காந்தி, கனிமொழி உள்ளிட்ட எம்.பி.,க்கள் கைது!

புதுடில்லி, ஆக.11 தேர்தல் ஆணை யத்தை எதிர்த்து ராகுல் காந்தி தலைமையில் தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை மற்றும் மாநிலங்க ளவையைச் சேர்ந்த 300 எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பேரணி நடத்தினர். பேரணியைத் தடுத்து நிறுத்திய காவல்துறை, ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.,க்களைக் கைது செய்தது!

கடந்த ஜூலை 21 ஆம் தேதியி லிருந்து தேர்தலில் நடைபெற்று வரும் முறைகேடுகள் குறித்த பிரச்சினையை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலை மையிலான எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.

ஆதாரப்பூர்வமாகப்
பல்வேறு குற்றச்சாட்டு!

ஆனால், அவையில் விவாதத்திற்கு ஒப்புக்கொள்ளாத பட்சத்தில்தான், கடந்த வாரம், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின்மீது ஆதாரப்பூர்வமாகப்  பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரி வித்திருந்தார்.

இந்தியா

பெங்களூரு மத்திய நாடாளுமன்றத் தொகுதி உள்பட மகாதேவ்புரா சட்ட மன்றத் தொகுதியில் தில்லுமுல்லுகள் நடைபெற்றதை ராகுல் காந்தி சில மாதங்களுக்கு முன்பு ஆதாரத்துடன் பல குற்றச்சாட்டுகளைச் சொன்னார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உதவியோடு, ஆளும் பாரதீய ஜனதா கட்சித் தேர்தலி்ல் வெற்றி பெறு வதற்காக முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது என்று இந்திய தேர்தல் ஆணையத்தின்மீது ராகுல் காந்தி கடுமையான ஒரு குற்றச்சாட்டை வைத்திருந்தார். குறிப்பாக, பெங்களூரு மற்றும் மராட்டிய மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகளைச் செய்து தான் பாரதீய ஜனதா கட்சி தேர்தலில் வெற்றி பெற்றது என்ற குற்றச்சாட்டை வெளிப்படையாகவே, பல்வேறு புள்ளி விவரங்களுடன் வெளியிட்டார்.

அது ஒரு பெரிய அதிர்வலையை நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா

இதற்கும் சரியான விளக்கத்தைத் தேர்தல் ஆணையம் அளிக்கவில்லை. அதற்குப் பதில், பிரமாணப் பத்திரத்தில்  கையெழுத்துப் போட்டு புகார் அளிக்க வேண்டும் என்றும், அது தவறான குற்றச்சாட்டு என்றால், அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியது.

ஏற்கெனவே பீகார் மாநிலத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தச் சட்டத்திற்கு எதிராக இந்திய கூட்டணி எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்ற இந்தச் சூழ்நிலையில்தான், இந்தியத் தேர்தல் ஆணையத்தின்மீது கடுமை யான குற்றச்சாட்டை ராகுல் காந்தி வைத்துள்ளார்.

தேர்தல் ஆணையரிடம் புகார் மனு!

மேற்கண்ட இரண்டு பிரச்சினை தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையரை நேரிடையாகச் சந்தித்து, மனு கொடுப்பதற்கு இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் முடிவு செய்திருந்தனர்.

இன்று (11.8.2025) காலையில், மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் இந்தப் பிரச்சினையைப்பற்றி குரல் எழுப்பினார்கள். இரண்டு அவைகளிலும் விவாதத்திற்கு ஒப்புக்கொள்ளப்படாத சூழ்நிலையில், இரு அவைகளும் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டன.

பேரணி தொடங்கியது

அதைத் தொடர்ந்துதான் இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் தேர்தல் ஆணையத்தை நோக்கி 300 எம்.பி.,க்கள் பேரணியைத் தொடங்கினர்.

காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலை வருமான மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் தலைமையில்தான் பேரணி, நாடாளுமன்ற  வளாகத்தில் இருந்து தொடங்கியது.

இந்தப் பேரணியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி, மக்களவை தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மற்றும் மாநிலங்களவை தி.மு.க. குழுத் தலைவர் திருச்சி சிவா  உள்ளிட்ட ஏராளமான மக்களவை, மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் பங்கேற்றனர்.

இந்தப் பேரணி, நாடாளுமன்ற வளாகத்திற்கு உள்ளே இருந்து தொடங்கியது. நாடாளுமன்றத்திற்குள் கடந்த ஜூலை 21 ஆம் தேதியி லிருந்து இந்தப் பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவா திக்கவேண்டும் என்று ஒத்தி வைப்பு தாக்கீதைக் கொடுத்திருந்தனர்.

எதிர்க்கட்சிகள் முடிவு

ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொடுக்கின்ற எந்தவொரு ஒத்தி வைப்புத் தீர்மானத்தை மக்களவைத் தலைவரோ,  மாநிலங்களவைத் தலைவரோ, துணைத் தலைவரோ  அந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு, அவையில் விவாதம் நடத்துவதற்கு ஒப்புக்கொள்ளாத ஒரு சூழலில்தான், தேர்தல் ஆணையம் நோக்கிய ஒரு பேரணியை நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன.

அதன்படிதான், இன்று (11.8.2025) நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தேர்தல் ஆணையம் நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணி யாகப் புறப்பட்டனர். 25 கட்சிகளைச் சேர்ந்த 300 எம்.பிக்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

எம்.பி.க்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர்

டில்லி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து 200 மீட்டர் தூரம் வரை பேரணி சென்ற நிலையில் டில்லி காவல்துறையினரால் எம்.பி.க்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனை எதிர்த்து எம்.பி.,க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர், எம்.பி.,க்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இரும்பு தடுப்புகளைக் கொண்டு எம்.பிக்களை டில்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

காவல்துறையினர் தடுத்து நிறுத்திய இடத்திலேயே எம்.பி.,க்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

ராகுல் காந்தி கைது!

சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட எம்.பி.,க்களைக் கைது செய்தனர். கனிமொழி கருணாநிதி உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.,க்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்து, பேருந்தில் ஏற்றியபோதும், பேருந்துக்குள் முழக்கம் எழுப்பியவாறே இருந்தனர். எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அனைவரின் பேரணி இப்பிரச்சினையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *