மும்பை, ஆக.6 மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக பா.ஜ.க.வைச் சேர்ந்த மேனாள் செய்தித் தொடர்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி யுள்ளது.
கட்சித் தொடர்புடைய ஒருவரை நீதிபதியாக நிய மிப்பது, நீதித் துறையின் மீதான நம்பிக்கைக்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தல் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
ஜூலை 28 அன்று நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் கூட்டத்தில், அஜித் பகான்ராவ் கதேதங்கர், ஆர்த்தி அருண் சாத்தே மற்றும் சுஷில் கோதேஷ்வர் ஆகியோரை மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மகாராட்டிர அரசு செய்த பரிந்துரை யின்பேரில், இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதில், ஆர்த்தி அருண் சாத்தே என்பவர் 2023 ஆம் ஆண்டு பாஜக செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆதாரங்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு, கடும் எதிர்ப்புகளை தெரி வித்துள்ளது.