‘‘இது மிக உயர்ந்த இலக்கு, எப்படி சாத்தியமாகும்?’’ என்றார்கள்! இதே வேகத்தில் சென்றால், எதுவும் சாத்தியமாகும்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

1 Min Read

2030 ஆம் ஆண்டுக்குள் One Trillion Dollar பொருளாதாரம் என்ற போது பலரது புருவமும் உயர்ந்தது!

சென்னை, ஆக.6 தமிழ்நாடு – இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டி யுள்ளது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு வருமாறு:

இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ அரசு!

இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் என்று கூறி வந்தோம் அல்லவா…

அதையும் தாண்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகியுள்ளது!

இதற்கு முன்பு, இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டது.

2010-2011 ஆம் ஆண்டில். அப்போது கலைஞர் ஆட்சி! இப்போது கலைஞர் வழி நடக்கும் ‘திராவிட மாடல்’ ஆட்சி! இரண்டுமே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி!

2030 ஆம் ஆண்டுக்குள் One Trillion Dollar பொருளாதாரம் என்ற போது பலரது புருவமும் உயர்ந்தது. ‘‘இது மிக உயர்ந்த இலக்கு, எப்படி சாத்தியமாகும்?’’ என்றார்கள்! இதே வேகத்தில் சென்றால், எதுவும் சாத்தியம் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *