வாக்காளர் பட்டியலில் திருத்தம் நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க அனுமதிக்க வேண்டும் ஒன்றிய அரசுக்கு பிரியங்கா காந்தி எம்.பி. வற்புறுத்தல்

1 Min Read

புதுடில்லி, ஆக.5- வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரம் மிகப்பெரிய பிரச்சினை என்பதால் அதை விவாதிக்க அரசு அனுமதிக்க வேண்டும் என ஒன்றிய அரசை பிரி யங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார்.

நாடாளுமன்றம் முடக்கம்

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்திலும் தினந்தோறும் எதிர்க் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் ஒன்றிய அரசு செவி சாய்க்காததால் நாடாளுமன்றம் முடங்கி வருகிறது. இது நேற்றும் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது.

பிரியங்கா சாடல்

இதற்கிடையில் நாடாளு மன்ற வளாகத்தில் செய்தியாளர் களை சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளரும், வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பின ருமான பிரியங்கா காந்தி, இது தொடர்பாக ஒன்றிய அரசை கடுமையாக சாடினார்.இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்த பிரச்சினை வாக்காளர் பட்டியல் தொடர்புடையது என்ற போதும், ஒன்றிய அரசு இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப அனுமதிக்காதது ஏன்?

இறங்கி வர வேண்டும்

இது ஒரு மிகப்பெரிய பிரச் சினை. வாக்காளர் பட்டியலில் இப்படியெல்லாம் செய்யப் பட்டால், நாங்கள் ஏன் அதை நாடாளுமன்றத்தில் எழுப்பக் கூடாது?

வாக்காளர் பட்டியல் திருத்த பிரச்சினையில் அரசு இறங்கி வர வேண்டும். இது குறித்து விவாதிக்க ஒப்புக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பிரியங்கா தெரி வித்தார்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *