காங்., சட்ட மாநாடு கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இதில் காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் ராகுல் பேசத் துவங்கியபோது, ‘இந்த நாட்டின் ராஜா எப்படி இருக்க வேண்டும்? ராகுல் காந்தி மாதிரி இருக்க வேண்டும்’ என முழக்கங்கள் எழுந்தன. இதனை மறுத்த அவர், “நான் ராஜா இல்லை. ராஜாவாக வேண்டும் என்ற ஆசையும் இல்லை. அந்த கோட்பாட்டுக்கு எதிரானவன்தான்” என்றார்.
நிலம் வைத்திருப்போர் கவனத்திற்கு..!
அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர், முறையாக விண்ணப்பித்து வரன்முறை செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 20.10.2016-க்கு முன்பு அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் தனி மனைகளை வாங்கியவர்களுக்கு இது பொருந்தும். onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீக்கிரம் பயன்படுத்திக்கோங்க!
‘ராஜா’ என்ற கோட்பாட்டுக்கு எதிரானவன் நான்: ராகுல்

Leave a Comment