புதுடில்லி, ஆக.1- நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை, நம்பிக்கையை அளிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அவரது மனு மீதான உத்தரவு ஒத்திவைக்கப் பட்டது.
பரிந்துரை
அலகாபாத் உயர்நீதிமன்றம் நீதிபதி யஷ்வந்த் வர்மா, இதற்கு முன்பு டில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். அப்போது. கடந்த மார்ச் 14-ஆம் தேதி அவரது டில்லி இல்லத்தில் நடந்த தீவிபத்தில், கோடிக்கணக்கான ரூபாய் பணம், எரிந்த நிலையில் கைப்பற்றப் பட்டது. அதுபற்றி விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட விசாரணை குழு, பணம் இருந்த அறை நீதிபதி குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், அவரை பதவி நீக்கம் செய்யலாம் என்றும் அறிக்கை சமர்ப்பித்தது. அதன்பேரில், நீதிபதியை பதவி நீக்கம் செய்யுமாறு அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரை செய்தார். அதைத்தொடர்ந்து, விசாரணை குழு அறிக்கையை செல்லாது என்று அறிவிக்கக் கோரியும், பதவி நீக்க பரிந்துரையை ரத்து செய்யக்கோரியும் நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக் கல் செய்தார்.
இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் திபங்கர் தத்தா, ஏ.ஜி.மசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (30.7.2025) மீண்டும் விசா ரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்விகள் விடுத்தனர்.
நீதிபதிகள் கூறியதாவது: உங்கள் நடத்தை, நம்பிக்கையை அளிக்கவில்லை. நீங்கள் ஏன் விசாரணை குழு முன்பு ஆஜரா னீர்கள்? ஏன் அப்போதே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?. விசாரணை குழுவுக்கு எதிராக நீங்கள் முன்பே உச்சநீதிமன்றத்திற்கு வந்திருக்க வேண்டும். ஒரு நீதிபதி தவறான நடத்தைகொண்டவர் என்று நம்புவதற்கு ஆதாரம் இருந்தால், அதுபற்றி குடியரசுத்தலைவர்க்கும், பிரதமருக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தகவல் தெரிவிக்கலாம். நீதிபதியை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கிறார்களா, இல்லையா என்பது அரசியல் ரீதி யான முடிவு.ஆனால், நீதித்துறை தகவல் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
ஆபத்தான முன்னுதாரணம்
‘நீதிபதி யஷ்வந்த் வர்மா சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் கூறியதாவது:-
நீதிபதி வர்மாவை நீக்க வேண்டும் என்ற விசாரணை குழுவின் பரிந்துரை அரசியல் சாசனத்துக்கு விரோதமா னது. இதுபோன்ற பரிந்துரை ஆபத்தான முன்னுதாரணமாகி விடும்.
காட்சிப் பதிவு வெளியாகி, நீதிபதி வர்மாவின் நற்பெயர் ஏற்ெகனவே பாதிக்கப்பட்டு இருந்தது. அதனால்தான் அவர் முன்பே உச்சநீதிமன்றத்தை அணுக வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ஒத்திவைப்பு
நீதிபதி வர்மா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்த வழக்குரைஞர் மாத்யூஸ் நெடும்பராவையும் நீதிபதிகள் கண்டித்தனர். “வழக்குப்பதிவு செய்ய கோருவதற்கு முன்பு, முறையான புகாருடன் காவல் துறையினரை அணுகினீர்களா?” என்று அவரிடம் கேட்டனர். பின்னர், விசாரணை குழு அறிக்கை மற்றும் பதவி நீக்க பரிந் துரைக்கு எதிரான நீதிபதி வர்மா மனு மீதான உத்தரவை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். வழக்குரைஞர் மாத்யூஸ் நெடும் பரா மனு மீதான உத்தரவையும் ஒத்தி வைத்தனர்.