மலேசியா பகாங் மாநிலத்தில் உள்ள 62 தொடக்கநிலை, இடை நிலை மற்றும் மலாய் பள்ளிகளைச் சேர்ந்த தமிழ் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்ட செந்தமிழ் விழாவில் பெரியார், அண்ணா , கலைஞர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் நூல்கள் 250 மாணவர்களுக்கு அன்பளிப்பாக பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர். மு கோவிந்தசாமி வழங்கினார்.
இந்த விழாவில் மாநில கல்வி இயக்குநர், சட்டமன்ற உறுப்பினர் வீ. ஆறுமுகம், தலைமை ஆசிரியர்கள், பெரியார் தொண்டர் மு.மணிமாறன் மற்றும் பெற்றோர்கள் ஏறத்தாழ 500-க்கும் மேற்பட்டோர் பெந்தா இடைநிலைப் பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.